பைக்
null

முற்றிலும் புதிய அப்டேட்களுடன் அறிமுகமான கவாசகி எலிமினேட்டர் 400!

Update: 2023-03-18 08:32 GMT
  • கவாசகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலிமினேட்டர் 400 மாடலில் 399சிசி, பேரலல் டுவின் என்ஜின் உள்ளது.
  • முதற்கட்டமாக எலிமினேட்டர் 400 மாடல் ஜப்பான் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.

கவாசகி நிறுவனம் முற்றிலும் புதிய எலிமினேட்டர் 400 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலிமினேட்டர் 400 மாடலில் நிஞ்சா 400 ஸ்போர்ட்பைக்-இல் உள்ளதை போன்ற எஞ்சினே வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் SE என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் SE வேரியண்டில் முன்புறம், பின்புற கேமராக்கள், இதர அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.

புதிய கவாசகி எலிமினேட்டர் 400 மாடலில் 399சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 48 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய டிரெலிஸ் ஃபிரேம், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறம் 240mm டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய எலிமினேட்டர் 400 மாடலில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இது நிஞ்சா 400 மாடலில் உள்ளதை விட 5 லிட்டர் வரை குறைவு ஆகும். இந்த மோட்டார்சைக்கிளின் சீட் உயரம் அனைத்து வித அளவுகளில் உள்ள ரைடர்களுக்கும் சவுகரியத்தை வழங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

புதிய கவாசகி எலிமினேட்டர் 400 மாடல் குரூயிசர் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதன் சைக்கிள் பாகங்கள் அனைத்தும் பிளாக் நிறம் கொண்டிருக்கும் நிலையில், முழுமையான எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஹோண்டா ரிபெல் 500 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.

இதன் டாப் எண்ட் SE வேரியண்டில் முன்புறம் மற்றும் பின்புற கேமரா சென்சார்கள்வழங்கப்பட்டுள்ளன. இவை டேஷ் கேமரா போன்று செயல்படுகின்றன. தற்போது கவாசகி எலிமினேட்டர் 400 மாடல் ஜப்பான் நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் என்றும் SE வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 33 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News