பைக்

ஆக்டிவா எலெக்ட்ரிக் வெளியீடு - சூப்பர் அப்டேட் கொடுத்த ஹோண்டா

Published On 2022-09-14 07:46 GMT   |   Update On 2022-09-14 07:46 GMT
  • ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன வெளியீடு பற்றிய தகவல்களை அறிவித்து இருக்கிறது.
  • அதன்படி எலெக்ட்ரிக் ஆக்டிவா உள்பட பத்து புது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன திட்டமிடல் குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதன்படி 2025 ஆம் ஆண்டிற்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய ஹோண்டா முடிவு செய்துள்ளது. ஹோண்டாவின் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன வெளியீடு பற்றிய தகவல்கள் லீக் ஆகி இருக்கின்றன.


அதன்படி சீனா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் ஆசியாவில் ஐந்து புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஹோண்டா அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத் தொடர்ந்து ஜப்பான், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நான்கு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் நியோ-ரெட்ரோ பைக், குரூயிசர் மற்றும் பெரிய மேக்சி ஸ்கூட்டர் வடிவில் உருவாகி இருக்கும் என கூறப்படுகிறது.

2024-25 வாக்கில் இரண்டு தனிப்பட்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்யவும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதில் ஒரு மாடல் தோற்றத்தில் ஆக்டிவா மாடலின் எலெக்ட்ரிக் வெர்ஷன் போன்று காட்சியளிக்கிறது. இதில் உள்ள மற்றொரு ஸ்கூட்டர் இந்திய சந்தையில் இளம் வாடிக்கையாளர்களை குறி வைத்து அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போதைய தகவல்களின் படி ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் ஆக்டிவா மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம்.

Tags:    

Similar News