பைக்

அசத்தல் கேஷ்பேக் சலுகையுடன் கிடைக்கும் ஹோண்டா ஆக்டிவா

Published On 2022-10-21 13:38 IST   |   Update On 2022-10-21 13:38:00 IST
  • ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அசத்தல் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகை தேர்வு செய்யப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஆக்டிவா மாடலுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகையின் கீழ் ஆக்டிவா ஸ்கூட்டர் வாங்குவோருக்கு ஐந்து சதவீதம் (அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம்) வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

எனினும், கேஷ்பேக் சலுகை மாத தவணை முறை பரிவர்த்தனைகளில் தேர்வு செய்யப்பட்ட டெபிட்/கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை வசதி மற்றும் முன்பணம் இல்லாமல் ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்கும் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

புதிய ஆக்டிவா ஸ்கூட்டரை வாங்குவோர் ஏதேனும் ஒரு சலுகையை மட்டுமே பெற முடியும். நிதி சலுகைகள் தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த சலுகை பலன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும்.

இந்திய சந்தையில் ஹோண்டா ஆக்டிவா சீரிஸ் - ஆக்டிவா 6ஜி (110சிசி) மற்றும் ஆக்டிவா 125 (125சிசி) என இரண்டு மாடல்களில் கிடைக்கிறது. ஹோண்டா ஆக்டிவா 6ஜி மாடல் விலை ரூ. 73 ஆயிரத்து 086 என்றும் ஆக்டிவா 125 விலை ரூ. 77 ஆயிரத்து 062 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News