பைக்

கீலெஸ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகமான ஹோண்டா ஆக்டிவா 6ஜி

Published On 2023-01-23 10:05 GMT   |   Update On 2023-01-23 10:05 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஆக்டிவா 6ஜி இருக்கிறது.
  • தற்போது ஹோண்டா ஆக்டிவா மாடல் மூன்று வித வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஆக்டிவா 6ஜி மாடலில் பல்வேறு புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. புது ஆக்டிவா மாடல் விலை ரூ. 80 ஆயிரத்து 537, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புது மாடலை தொடர்ந்து ஹோண்டா ஆக்டிவா மாடல் - ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் அலாய் வீல் கொண்ட ஸ்மார்ட் கீ என மூன்று வித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் உள்ள ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரில் கீலெஸ் வசதியை வழங்கி உள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஹேண்டில்பார் லாக் / அன்லாக், அண்டர் சீட் ஸ்டோரேஜ் மற்றும் ஃபியூவல் நிரப்பும் மூடியை திறப்பது உள்ளிட்டவைகளை சாவி இன்றி இயக்க முடியும்.

இத்துடன் ஆண்டி-தெஃப்ட் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஸ்கூட்டரில் உள்ள நாப்-போன்ற ஸ்விட்ச் கொண்டு மேலே உள்ள அம்சங்களை இயக்கலாம். இத்துடன் அலாய் வீல்களில் புது டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது. இவைதவிர ஸ்கூட்டரின் ஸ்டைலிங் மற்றும் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்மார்ட் கீ வேரியண்டிலும் 109.51சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம், கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், ஒற்றை ரியர் ஸ்ப்ரிங், டிரம் பிரேக் உள்ளிட்டவை ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. 

Tags:    

Similar News