பைக்

புதிய அம்சங்களுடன் உருவாகும் ஹோண்டா ஆக்டிவா 6ஜி - விரைவில் வெளியீடு!

Published On 2023-03-17 10:29 GMT   |   Update On 2023-03-17 10:29 GMT
  • ஹோண்டா நிறுவனத்தின் புதிய ஆக்டிவா 6ஜி மாடல் விரைவில் அறிமுகமாகிறது.
  • புதிய ஆக்டிவா மாடலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் முன்னணி ஸ்கூட்டர் மாடலாக விளங்கும் போதிலும், ஆக்டிவா ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறது. புதிய அப்டேட்கள் பயனர்களின் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் வகையில் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஆக்டிவா மாடலில் ஹோண்டா ஸ்மார்ட் கீ, H ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை வழங்கியது. கார்களில் வழங்கப்படும் ஆட்டோ லாக்/அன்லாக், பார்க்டு லொகேஷன் ஃபைண்டர் மற்றும் கீலெஸ் ஸ்டார்ட் போன்ற அம்சங்களை வழங்குகிறது. இதைத்தொடர்ந்து ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா 6ஜி மாடலுக்கு மேலும் சில அப்டேட்களை வழங்கும் என தெரிகிறது.

ஹோண்டா ஷைன் 100 வெளியீட்டு நிகழ்வின் போது புதிய அப்டேட் பற்றிய தகவல்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா தலைவர், தலைமை செயல் அதிகாரி அடுஷி ஒகாடா தெரிவித்து இருக்கிறார். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஆக்டிவா H ஸ்மார்ட் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

ஆக்டிவா 6ஜி மாடலில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் புதிய வேரியண்டில் H ஸ்மார்ட் கீலெஸ் சிஸ்டம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. தற்போதைய ஆக்டிவா மாடலில் அனலாக் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News