பைக்

கோப்புப்படம் 

350சிசி-யில் ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் உருவாக்கும் ஹோண்டா

Published On 2024-02-05 05:49 GMT   |   Update On 2024-02-05 05:49 GMT
  • புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் தோற்றம் கொண்டிருக்கிறது.
  • ஹிமாலயன் 411 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய 350 சிசி மோட்டார்சைக்கிளை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த மோட்டார்சைக்கிள்CB350 பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படும் என்றும் இதன் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 411 மாடலை தழுவி வடிவமைக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், ஹோண்டா நிறுவன மோட்டார்சைக்கிளின் காப்புரிமை புகைப்படம் லீக் ஆகி இருக்கிறது. அதில் புதிய மோட்டார்சைக்கிள் ஸ்கிராம்ப்ளர் தோற்றம் கொண்டிருக்கிறது. இது தற்போது விற்பனை செய்யப்படும் ஹோண்டா CB350 RS மாடலை விட ரக்கட் தோற்றம் கொண்டிருக்கும் என தெரிகிறது. தற்போதைய புகைப்படங்களின் படி புதிய ஹோண்டா பைக் பெட்ரோல் டேன்க்-ஐ சுற்றி மெட்டல் ஃபிரேம்கள் உள்ளன.

 


புதிய ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிளை உருவாக்க ஹோண்டா நிறுவனம் அதே சேசிஸ் மற்றும் என்ஜினை பயன்படுத்தும் என தெரிகிறது. எனினும், இந்த என்ஜின் பைக்கிற்கு ஏற்றவகையில் டியூனிங் செய்யப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. புதிய ஸ்கிராம்ப்ளர் மோட்டார்சைக்கிள் பாகங்கள் பெரும்பாலும் CB350 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

தற்போதைக்கு இந்த மோட்டார்சைக்கிள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. எனினும், இந்த பைக் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். விலையை பொருத்தவரை தற்போது விற்பனை செய்யப்படும் CB350 சீரிசை விட ஸ்கிராம்ப்ளர் மாடல் விலை சற்று அதிகமாகவே இருக்கும்.

Tags:    

Similar News