பைக்

2 வேரியண்ட்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஹீரோ கிளாமர்

Published On 2023-08-26 09:25 GMT   |   Update On 2023-08-26 09:25 GMT
  • புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளில் ஏர்-கூல்டு 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் உள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வந்த கிளாமர் மோட்டார்சைக்கிள், 2020 வாக்கில் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது.

இந்திய சந்தையில் ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் டிரம் மற்றும் டிஸ்க் என இருவித வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றின் விலை முறையே ரூ. 82 ஆயிரத்து 348 மற்றும் ரூ. 86 ஆயிரத்து 348 என்று நிர்ணம் செய்யப்பட்டு உள்ளன. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 

புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிளில் ஏர்-கூல்டு 124.7 சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 10.5 ஹெச்.பி. பவர், 10.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. மேலும் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின்புறம் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிளாமர் மோட்டார்சைக்கிளில் 240mm டிஸ்க் அல்லது 130mm டிரம் பிரேக், 130mm டிரம் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. புதிய கிளாமர் மோட்டார்சைக்கிள் எளிமையான கம்யுட்டர் மாடல் ஆகும். இதில் ஹீரோ நிறுவனத்தின் i3s ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம், டிஜிட்டல் டேஷ்போர்டு, யு.எஸ்.பி. சார்ஜிங் போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் புதிய ஹீரோ கிளாமர் மோட்டார்சைக்கிள் ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பல்சர் 125 நியான் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

Tags:    

Similar News