பைக்

350சிசி மற்றும் 500சிசி மோட்டார்சைக்கிள்களை அறிமுகம் செய்த ஹார்லி டேவிட்சன்

Published On 2023-09-04 10:43 GMT   |   Update On 2023-09-04 10:43 GMT
  • புதிய மாடல்கள் ஹார்லி, குயிஜியாங் நிறுவனங்கள் கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
  • இரண்டு மாடல்களும் லியோன்சினோ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு உள்ளது.

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் X350 மற்றும் X500 மோட்டார்சைக்கிள் மாடல்களை ஆஸ்திரேலிய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் மாடல்கள் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் இண்டர்செப்டார் 650, ஹோண்டா ரிபெல் 300 மற்றும் 500 மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளன.

புதிய ஹார்லி டேவிட்சன் X350 மற்றும் X500 மாடல்கள் ஹார்லி மற்றும் குயிஜியாங் நிறுவனங்கள் இடையேயான கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த இரண்டு மாடல்களும் லியோன்சினோ பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றின் ஃபிரேம், என்ஜின் என பல்வேறு பாகங்கள் ஒரேமாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

 

ஹார்லி X350 மாடலில் 353சிசி, பேரலல் டுவின், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 36 ஹெச்.பி. பவர், 31 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹார்லி டேவிட்சன் X500 மாடலில் 500சிசி பேரலல் டுவின் என்ஜின் உள்ளது. இந்த யூனிட் 47 ஹெச்.பி. பவர், 46 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

இந்திய சந்தையில் ஏற்கனவே ஹார்லி டேவிட்சன் X440 மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால், புதிய X350 மற்றும் X500 மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படாது என்றே தெரிகிறது. இந்திய சந்தையில் ஹார்லி டேவிட்சன் X440 மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. 

Tags:    

Similar News