பைக்

ரூ. 1.60 லட்சம் விலையில் புது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம்

Update: 2022-06-23 04:12 GMT
  • புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கியது.
  • இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

பூனேவை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர் ஈவ்ட்ரிக் மோட்டார்ஸ் இந்தியாவில் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. ஈவ்ட்ரிக் ரைஸ் என அழைக்கப்படும் எலெக்ட்ரிக் பைக்கின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.


புதிய ஈவ்ட்ரிக் ரைஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஈவ்ட்ரிக் ரைஸ் மாடலில் 2000 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 70v/40ah லித்தியம் அயன் பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது.

ஈவ்ட்ரிக் ரைஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 110 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு அதிகபட்சம் 70 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ரெட் மற்றும் பிளாக் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது.

Tags:    

Similar News