பைக்

ப்ளூடூத் வசதியுடன் டெஸ்டிங்கில் சிக்கிய பல்சர் 250 மாடல்கள்

Published On 2024-03-18 11:47 GMT   |   Update On 2024-03-18 11:47 GMT
  • டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.
  • இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படலாம்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது பல்சர் சீரிஸ் மாடல்களை முற்றிலுமாக மாற்றியமைத்து வருகிறது. அந்த வகையில் பல்சர் N250 மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் செய்யப்படும் மாடலில் டிஜிட்டல் டேஷ்போர்டு உள்ளது.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பல்சர் N150 மற்றும் பல்சர் N160 மாடல்களிலும் இதே போன்ற டிஜிட்டல் யூனிட் வழங்கப்பட்டு இருந்தது. தற்போது இவை பல்சர் சீரிசின் பெரிய மாடல்களிலும் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இந்த யூனிட்-இல் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படும் என்று தெரிகிறது.

 


முந்தைய ஸ்பை படங்களில் புதிய பல்சர் N250 மாடலில் யு.எஸ்.டி. ஃபோர்க் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது பல்சர் NS160 மற்றும் பல்சர் NS200 மாடல்களில் உள்ளதை போன்றே இருக்கும் என்றும் N250 மாடலுக்கு ஏற்ற டியூனிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட மற்ற பஜாஜ் பல்சர் மோட்டார்சைக்கிள்களை போன்றே புதிய 250 சீரிஸ் மாடல்களிலும் மெக்கானிக்கல் மாற்றங்கள் செய்யப்படாது என்றே தெரிகிறது. புது அப்டேட்களுக்கு ஏற்ப புதிய பல்சர் 250 மாடல்களின் விலையும் சற்று அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News