பைக்

பல்சர் கார்பன் ஃபைபர் எடிஷனை அறிமுகம் செய்த பஜாஜ்

Update: 2022-11-15 09:11 GMT
  • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் பல்சர் 125 புது வேரியண்டை அறிமுகம் செய்து இருக்கிறது.
  • புது வேரியண்ட் பல்சர் 125 சிங்கில் சீட் மற்றும் ஸ்ப்லிட் சீட் வேரியண்ட்களிலும் கிடைக்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய கார்பன் எடிஷன் சிங்கில் சீட் மற்றும் ஸ்ப்லிட் சீட் என இரண்டு வேரியண்ட்களிலும் கிடைக்கிறது. இந்த மாடல் புளூ மற்றும் ரெட் என இரண்டு வித நிறங்களில் கிடைக்கிறது.

புதிய பஜாஜ் பல்சர் 125 கார்பன் ஃபைபர் எடிஷன் சிங்கில் சீட் விலை ரூ. 89 ஆயிரத்து 254 என்றும் ஸ்ப்லிட் சீட் வெர்ஷன் விலை ரூ. 91 ஆயிரத்து 642 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரண்டு வித நிறங்களிலும் பிளாக் பேஸ் நிறமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஹெட்லைட் கௌல், பியூவல் டேன்க் மற்றும் ஷிரவுட்கள், என்ஜின் கௌல், ரியல் பேனல், வீல் ஸ்டிரைப் உள்ளிட்டவைகளில் கிராபிக்ஸ் உள்ளது.

கார்பன் ஃபைபர் கிராபிக்ஸ் பெல்லி பேன், முன்புற ஃபெண்டர், டேன்க், ரியர் கௌல் உள்ளிட்டவைகளில் இடம்பெற்று இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த டிசைனில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் சிங்கில்-பாட் ஹெட்லைட், ட்வின் டிஆர்எல்கள், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், போல்டெட் ஷிரவுட்கள், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

மெக்கானிக்கல் அம்சங்களிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த மாடலிலும் 124.4சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 11.64 ஹெச்பி பவர், 10.80 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News