பைக்

கோப்புப்படம்

லீக் ஆன பஜாஜ் சி.என்.ஜி. பைக் படங்கள்.. வெளியான புது விவரங்கள்

Published On 2024-03-19 10:02 GMT   |   Update On 2024-03-19 10:02 GMT
  • உற்பத்தி நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
  • உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய சி.என்.ஜி. பைக் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புதிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. டெஸ்டிங் புகைப்படங்கள் பலமுறை வெளியாகிவிட்ட நிலையில், இந்த மாடல் அதன் உற்பத்தி நிலையை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போதைய ஸ்பை படங்களின் படி பஜாஜ் சி.என்.ஜி. பைக்கில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், பல்பு இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு செய்யும் போது, பைக்கிற்கு நவீன அம்சம் வழங்குவது மற்றும் உற்பத்தி விலையை கட்டுக்குள் வைக்க முடியும்.

 


ஹார்டுவேர் அம்சங்களை பொருத்தவரை டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், மோனோஷாக் யூனிட், முன்புறம் ஒற்றை டிஸ்க், பின்புறம் டிரம் பிரேக் வழங்கப்படும் என்று தெரிகிறது. மேலும் இந்த பைக்கில் சி.என்.ஜி. டேன்க் வைப்பதற்கான இடவசதி உள்ளது. இதற்காக மோட்டாரின் மேல் இடம் ஒதுக்கப்படுகிறது.

புதிய சி.என்.ஜி. பைக் 100 முதல் 160 சிசி பிரிவில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிகிறது. இதுதவிர இந்த பைக்கில் ஹேண்டில் கார்டுகள், ஹெட்லைட் கவுல், என்ஜின் கிராஷ் கார்டு, கிராப் ரெயில் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் புதிய சி.என்.ஜி. பைக் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

Tags:    

Similar News