பைக்
null

127 கி.மீ. ரேஞ்ச் வழங்கும் புதிய சேட்டக் மாடலை அறிமுகம் செய்த பஜாஜ்

Published On 2025-06-18 14:34 IST   |   Update On 2025-06-18 14:38:00 IST
  • புதிய சேட்டக் 3001 மாடல் முழு சார்ஜ் செய்தால் 127 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • சேட்டக் 3001 மாடல் அதன் வகுப்பில் உள்ள ஒரே உலோகத்தால் ஆன எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தொடர்கிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவம் சேட்டக் 2903 மற்றும் பிரபலமான சேட்டக் 35 சீரிஸ் பிளாட்ஃபார்ம்களின் வரவேற்பை தொடர்ந்து சேட்டக் 3001 என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய சேட்டக் 3004 மாடல் இந்திய சந்தையில் ரூ. 99,990 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 3.0 kWh பேட்டரியைக் கொண்ட புதிய EV கட்டமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ஸ்கூட்டரின் ஈர்ப்பு மையத்தைக் குறைக்க உதவுகிறது. ஒட்டுமொத்த நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

புதிய சேட்டக் 3001 மாடல் முழு சார்ஜ் செய்தால் 127 கிலோமீட்டர்கள் வரை ரேஞ்ச் வழங்கும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. தினசரி பயணங்கள் மற்றும் குறுகிய தூர பயணங்கள் என இரண்டையும் எளிதாக உள்ளடக்கும் என்று உறுதியளிக்கிறது. இத்துடன் பஜாஜ் 750 W சார்ஜரையும் வழங்குகிறது. இது பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை 3 மணி நேரம் 50 நிமிடங்களில் சார்ஜ் செய்து விடும்.



இது இந்த பிரிவில் வேகமான சார்ஜிங் நேரங்களில் ஒன்றாகும். சேட்க் 3001 மாடலில் பஜாஜ் விருப்பமான TecPac தொழில்நுட்ப தொகுப்பை வழங்குகிறது. இந்த தொகுப்பில் - போன் கால் ஏற்றுக்கொள்ளுதல் / நிராகரித்தல் செயல்பாடு, இசை கட்டுப்பாடு, ஹில்-ஹோல்ட் அசிஸ்ட், ஒளியுடன் கூடிய ரிவர்ஸ் மோட் மற்றும் ஆட்டோ-ஃப்ளாஷிங் ஸ்டாப் லேம்ப் போன்ற அம்சங்கள் உள்ளன.

சேட்டக் 3001 மாடல் அதன் வகுப்பில் உள்ள ஒரே உலோகத்தால் ஆன எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக தொடர்கிறது. மேலும் IP67-மதிப்பீடு பெற்றுள்ளது. இது தூசி மற்றும் தண்ணீருக்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்கிறது. சிறந்த அணுகலை மேலும் வழங்குவதற்காக, சேட்டக் 3001 விரைவில் அமேசானில் விற்பனைக்கு கிடைக்கும்.

பஜாஜ் சேட்டக், FY25 இன் நான்காம் காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2025) இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருந்துள்ளது. இது 35 சீரிசின் (சேட்டக் 3501 மற்றும் 3502 உட்பட) வெற்றியை தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சேட்டக் 3001 இந்த வரிசையில் வெற்றியை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News