பைக்

வெளியீட்டுக்கு ரெடியாகும் யமஹா R7... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2025-10-31 15:18 IST   |   Update On 2025-10-31 15:18:00 IST
  • 2026 யமஹா R7 அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது.
  • ​​MT போன்ற அதே மாற்றங்களுடன் தான் R7 அறிமுகம் செய்யப்பட உள்ளது.

யமஹா நிறுவனம் விரைவில் சர்வதேச சந்தைகளுக்கான 2026 R7 மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. சுவிட்சர்லாந்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஹோமோலோகேஷன் ஆவணங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகி உள்ளது. இது புதுப்பிக்கப்பட்ட என்ஜினுடன் ஒரு புதிய மாடல் இருப்பதைக் குறிப்பிடுகிறது.

சர்வதேச சந்தையில் யமஹா R7 மாடல் 2022ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்த பைக் கொண்டிருந்த அம்சங்கள், ஸ்டைலிங் மற்றும் பலவித காரணங்களுக்காக இது உடனடியாக பிரபலமடைந்தது. இருப்பினும், அதன் பின்னர் இந்த பைக் எந்த அப்டேட்டையும் பெறவில்லை.

இதே பைக்குடன் அறிமுகமான நேக்கட் பைக்கான MT-07, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய அப்டேட்டை பெற்றது. இப்போது, MT போன்ற அதே மாற்றங்களுடன் தான் R7 அறிமுகம் செய்யப்பட உள்ளது.



புதிய R7 சமீபத்திய யூரோ 5 பிளஸ் எமிஷன் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் புதிய MT-07 மாடலை போலவே, ஸ்போர்ட் பைக்கிலும் தேர்ந்தெடுக்கக்கூடிய ரைட் மோட்கள் மற்றும் மாறக்கூடிய டிராக்ஷன் கண்ட்ரோல் கொண்ட எலெக்ட்ரிக் த்ராட்டில் வழங்கப்படலாம். செயல்திறனைப் பொறுத்தவரை, 73bhp பவர், 67Nm டார்க் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

2026 யமஹா R7 அடுத்த வாரம் நடைபெறும் EICMA நிகழ்வில் வெளியிடப்பட உள்ளது. அதன் இந்திய வெளியீட்டைப் பொறுத்தவரை, யமஹா தனது பெரிய பைக்குகளை நீண்ட காலமாக நம் நாட்டுக்குக் கொண்டுவருவது குறித்து பரிசீலித்து வருகிறது, ஆனால் அதற்கு மேல் எந்த மேம்பாடும் இல்லை.

Tags:    

Similar News