பைக்

இரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான 2024 ஹோண்டா CB300R!

Published On 2023-06-26 08:45 IST   |   Update On 2023-06-26 08:45:00 IST
  • ஹோண்டா நிறுவனம் தனது CB300R மோட்டார்சைக்கிளை அப்டேட் செய்தது.
  • 2024 ஹோண்டா CB300R மாடலில் ஹார்டுவேர் மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹோண்டா நிறுவனம் முற்றிலும் புதிய CB300R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய என்ட்ரி லெவல் பிரீமியம் ஸ்டிரீட் மாடல் 2024 ஆண்டிற்காக அப்டேட் செய்யப்பட்டு உள்ளது. ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனத்தின் 2024 CB300R மாடல்- மேட் பிளாக் மெட்டாலிக் மற்றும் பியல் டஸ்க் எல்லோ என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

இரு நிறங்களில் கிடைக்கும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விற்பனை அமெரிக்காவில் நடைபெற இருக்கிறது. புதிய மாடலில் மெக்கானிக்கல் அப்டேட்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த மாடலில் 286சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இத்துடன் முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாடலில் பெட்டல் ரக டிஸ்க் பிரேக்குகள், 17 இன்ச் அலாய் வீல்கள், எல்இடி லைட்டிங், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ஸ்லிப்பர் அசிஸ்ட் கிளட்ச் உள்ளது.

புதிய 2024 ஹோண்டா CB300R மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இதன் விலை தற்போதைய மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படும் என்று தெரிகிறது.

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹோண்டா CB300R பியல் ஸ்பார்டன் ரெட் மற்றும் மேட் ஸ்டீல் பிளாக் மாடல்கள் விலை ரூ. 2 லட்சத்து 77 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News