பைக்

ரூ. 60 ஆயிரம் பட்ஜெட்டில் ஹீரோவின் புதிய பைக் இந்தியாவில் அறிமுகம்!

Published On 2023-06-06 03:15 GMT   |   Update On 2023-06-06 03:15 GMT
  • புதிய ஹீரோ HF டீலக்ஸ் மாடல் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
  • ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் ஏர் கூல்டு, 97சிசி, சிங்கில் சிலிண்டர் ஸ்லோபர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எண்ட்ரி லெவல் 100சிசி மாடல், HF டீலக்ஸ்-ஐ அப்டேட் செய்து இருக்கிறது. தற்போது இதன் விலை ரூ. 60 ஆயிரத்து 760 என்று துவங்குகிறது. புதிய ஹீரோ HF டீலக்ஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 67 ஆயிரத்து 208 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2023 ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் டியூப்லெஸ் டயர்கள் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் i3s (ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம்) வழங்கப்படுகிறது. இத்துடன் யுஎஸ்பி சார்ஜிங் வசதியும் உள்ளது. இந்த பைக்குடன் ஐந்து ஆண்டுகள் வாரண்டி மற்றும் ஐந்து இலவச சர்வீஸ் வழங்கப்படுகிறது.

ஹீரோ HF டீலக்ஸ் மாடலில் ஏர் கூல்டு, 97சிசி, சிங்கில் சிலிண்டர் ஸ்லோபர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8 ஹெச்பி பவர், 8.05 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின் OBD 2 மற்றும் E20 ரக எரிபொருளில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் டபுல் கிராடில் ஃபிரேமில் வைக்கப்பட்டு உள்ளது. சஸ்பென்ஷனுக்கு டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் 2 ஸ்டெப் அ்ட்ஜஸ்ட் செய்க்கூடிய டுவின் ஷாக் அப்சார்பர் செட்டப் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் 9.6 லிட்டர் ஃபியூவல் டேன்க் உள்ளது.

இந்திய சந்தையில் புதிய ஹீரோ HF டீலக்ஸ் மாடல்- டிரம், கிக் ஸ்டார்ட் மற்றும் டிரம் செல்ஃப் ஸ்டார்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 60 ஆயிரத்து 760, ரூ. 67 ஆயிரத்து 208, ரூ. 64 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலைகள் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News