ஆட்டோமொபைல்
டுகாட்டி பணிகல் வி4 எஸ்.பி.

ரூ. 36.07 லட்சம் விலையில் புது மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அறிமுகம்

Update: 2021-11-20 08:23 GMT
டுகாட்டி நிறுவனத்தின் புதிய பணிகல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.


டுகாட்டி நிறுவனம் பணிகேல் வி4 எஸ்.பி. மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது பணிகேல் வி4 எஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும். இந்தியாவில் டுகாட்டி பணிகேல் வி4எஸ் விலை ரூ. 28.40 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

ஒட்டுமொத்த தோற்றத்தில் பணிகேல் வி4எஸ்.பி. மாடல் பணிகேல் வி4எஸ் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், புதிய வி4 எஸ்.பி. மாடலில் விண்டர் டெஸ்ட் லிவெரி கொண்டிருக்கிறது. பணிகேல் வி4 எஸ்.பி. மாடலில் மார்ஷெஸ்னி போர்ஜ் செய்யப்பட்ட அலுமினியம் வீல்கள் மற்றும் பைரெளி டையப்ளோ சூப்பர்கோசா எஸ்.பி. டையர்கள் வழங்கப்படுகிறது.புதிய டுகாட்டி பணிகேல் வி4 எஸ்.பி. மாடலிலும் 1103சிசி, டெஸ்மோடிசி ஸ்டிரேடேல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 214 பி.ஹெச்.பி. திறன், 124 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த மாடலில் ஓலின்ஸ் மற்றும் பிரெம்போ சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய எஸ்.பி. மாடலில் குவிக்‌ஷிப்டர், ரைடிங் மற்றும் பவர் மோட்கள், டிராக்‌ஷன் கண்ட்ரோல், வீலி கண்ட்ரோல், என்ஜின் பிரேக் கண்ட்ரோல் மற்றும் லான்ச் கண்ட்ரோல் போன்ற எலெக்ட்ரிக் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News