ஆட்டோமொபைல்
2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750

இரண்டு வேரியண்ட்களில் அறிமுகமான 2021 சுசுகி ஜிஎஸ்எக்ஸ் எஸ்750

Published On 2020-12-28 09:32 GMT   |   Update On 2020-12-28 09:32 GMT
சுசுகி நிறுவனத்தின் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 பிரீமியம் மோட்டார்சைக்கிள் மாடல் இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.


சுசுகி நிறுவனம் 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மோட்டார்சைக்கிள் மாடலை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடல் யூரோ 4 விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாகி இருக்கிறது. அப்டேட்களை பொருத்தவரை 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மாடல் புதிய நிறத்தில் கிடைக்கிறது.

புதிய நிறம் மட்டுமின்றி இந்த மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. நிறம் தவிர இந்த மாடலின் தோற்றத்தில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.



2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 ஏபிஎஸ் மாடல் பியல் பிரிலியண்ட் வைட் மற்றும் சாம்பியன் எல்லோ நம்பர் 2 நிறத்திலும் ஏபிஎஸ் இல்லாத மாடல் மெட்டாலிக் ஊர்ட் கிரே நம்பர் 3 மற்றும் கிளாஸ் ஸ்பார்கிள் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது.

சுசுகியின் புதிய 2021 ஜிஎஸ்எக்ஸ் எஸ்750 மோட்டார்சைக்கிள் ஒற்றை ஹெட்லைட், ஃபேங் வடிவ டிஆர்எல்கள், எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் பேனல், மஸ்குலார் ஸ்டைலிங், ஸ்ப்லிட் ஸ்டைல் சீட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் அப்சைடு டவுன் கேவைபி முன்புற போர்க்குகள், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் யூரோ 4 விதிகளுக்கு பொருந்தும் 749சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 113 பிஹெச்பி பவர், 81 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
Tags:    

Similar News