ரெவோல்ட் நிறுவனத்தின் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை மாற்றப்பட்டு உள்ளது.
ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் விலை மாற்றம்
பதிவு: டிசம்பர் 10, 2020 16:33
ரெவோல்ட் மோட்டார்சைக்கிள்
ரெவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ஆர்வி400 மற்றும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களின் விலையை உயர்த்தி உள்ளது. இரு மாடல்களின் விலையும் ரூ. 15 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் முன்பதிவு கட்டணம் மற்றும் ஒருமுறை செலுத்தும் தொகையும் அடங்கும்.
ரெவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் 2019 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இவற்றின் விலை முதல் முறையாக உயர்த்தப்பட்டன.
முன்னதாக ஆர்வி300 மாடல் ரூ. 84,999, ஆர்வி400 மாடல் ரூ. 1,03,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்சமயம் மோட்டார்சைக்கிள் விலை மட்டுமின்றி முன்பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
விலை உயர்வின் படி ரெவோல்ட் ஆர்வி300 மாடல் துவக்க விலை ரூ. 94,999 என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையில் இருந்து ரூ. 10 ஆயிரம் வரை அதிகம் ஆகும். ரெவோல்ட் ஆர்வி400 மாடல் துவக்க விலை ரூ. 1.19 லட்சம் என மாறி இருக்கிறது. இது முந்தைய விலையை விட ரூ. 15 ஆயிரம் வரை அதிகம் ஆகும்.
Related Tags :