ஆட்டோமொபைல்
அப்ரிலியா டியுனோ வி4 1100

இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கும் பியாஜியோ

Published On 2020-12-09 08:39 GMT   |   Update On 2020-12-09 08:39 GMT
பியாஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் வெளியிட இரண்டு புதிய மோட்டார்சைக்கிள்களை உருவாக்கி வருகிறது.


பியாஜியோ இந்தியா நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேகமாக புது மோட்டார்சைக்கிள் பிளாட்பார்மை உருவாக்கி வருகிறது. இதன்கீழ் அந்நிறுவனம் 350சிசி-450சிசி மோட்டார்சைக்கிள் மாடல்களை அப்ரிலியா பிராண்டிங்கில் வெளியிட இருக்கிறது.

இந்த தகவலை பியாஜியோ இந்தியா நிறுவன தலைமை செயல் அதிகாரி டெய்கோ கிராபி உறுதிப்படுத்தி இருக்கிறார். தற்சமயம் இவை கான்செப்ட் வடிவில் இருப்பதாகவும் விரைவில் சந்தையில் வெளியாக 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக பியாஜியோ நிறுவனம் ஆர்எஸ்150 மற்றும் டியுனோ 150 மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. இவை இரண்டும் அனைவரின் கவனத்தை ஈர்த்தன. இதே வழக்கத்தை பியாஜியோ தற்சமயம் 350சிசி-450சிசி மோட்டார்சைக்கிள்களில் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது.

புதிய உயர் ரக மோட்டார்சைக்கிள்கள் பியாஜியோ நிறுவனத்தின் இத்தாலி நாட்டு குழுவினரால் வடிவமைக்கப்பட்டு இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. இவை பெரிய மாடலின் தோற்றத்தை தழுவி, சந்தையில் உள்ள அதிநவீன அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News