ஆட்டோமொபைல்
ஏத்தர் 450எக்ஸ்

2021 ஜனவரி முதல் விரிவாக்க பணிகளை துவங்கும் ஏத்தர் எனர்ஜி

Published On 2020-12-08 11:34 GMT   |   Update On 2020-12-08 11:34 GMT
2021 ஜனவரி மாதம் முதல் விரிவாக்க பணிகளை துவங்க ஏத்தர் எனர்ஜி நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.


ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு துவங்கி நாட்டின் 27 நகரங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவித்து இருக்கிறது. இந்தியாவில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகளின் அங்கமாக இது அமைகிறது.

முன்னதாக முதற்கட்ட விரிவாக்க பணிகளின் போது மைசூரு, ஹூப்ளி, ஜெய்பூர், இந்தூர், பனாஜி, புவனேஷ்வர், நாசிக், சூரத், சண்டிகர், விஜயவாடா, விசாகபட்டினம், நாக்பூர், நொய்டா, லக்னோ மற்றும் சிலிகுரி என 16 புதிய நகரங்களில் ஏத்தர் 450எக்ஸ் விற்பனை துவங்கப்பட்டது. 

இதுதவிர பெங்களூரு மற்றும் சென்னை நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதுதவிர டெல்லி, மும்பை, பூனே மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களில் சமீபத்தில் விற்பனையை துவங்கி இருக்கிறது.
Tags:    

Similar News