ஆட்டோமொபைல்
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160

அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-12-07 08:29 GMT   |   Update On 2020-12-07 08:29 GMT
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


பியாஜியோ நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டரை இந்த மாதம் வெளியிடலாம் என தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக இதே ஸ்கூட்டர் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. 

தற்போதைய தகவல்களின் படி எஸ்எக்ஸ்ஆர் 160 ஸ்கூட்டர் இந்தியாவில் டிசம்பர் மாதத்தின் நான்காவது வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிகிறது. இம்மாத இறுதியில் விற்பனையகம் வந்து, ஜனவரி மாத துவக்கத்தில் இதன் விநியோகம் துவங்கலாம் என கூறப்படுகிறது. 



புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் இந்திய சந்தைக்கென உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் உள்ள எல்இடி ஹெட்லேம்ப்கள் ஆர்எஸ்660 மாடலில் உள்ளது போன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

பின்புறம் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சவுகரியமான இருக்கை, எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் வழங்கப்படுகிறது. மேலும் இதில் 160சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. 
Tags:    

Similar News