கவாசகி நிறுவனம் தனது 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சர்வதேச சந்தையில் 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ அறிமுகம்
பதிவு: நவம்பர் 29, 2020 09:45
2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ
கவாசகி நிறுவனத்தின் 2021 இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மேம்பட்ட மோட்டார்சைக்கிளில் புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
2021 இசட் ஹெச்2 எஸ்இ மாடலில் கவாசகி நிறுவனத்தின் செமி ஆக்டிவ் எலெக்டிரானிக் கண்ட்ரோல் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இது பயணிக்கும் போது சாலை மற்றும் ரைடிங் நிலைகளுக்கு ஏற்ற வகையில் டேம்பிங் செய்கிறது.
சஸ்பென்ஷனிற்கு ஷோவாவின் 43எம்எம் யுஎஸ்டி போர்க், பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய புதிய யுனி டிராக், BFRC லைட் கியாஸ் சார்ஜ் செய்யப்பட்ட ஷாக் வழங்கப்பட்டு இரு்கிறது. ரெயின் மோடில் ஷோவா தொழில்நுட்பம் சிறந்த கண்ட்ரோல் வழங்குகிறது.
புதிய 2021 கவாசகி இசட் ஹெச்2 எஸ்இ மோட்டார்சைக்கிளில் 998சிசி சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 198 பிஹெச்பி பவர், 137 என்எம் டார்க் செயல்திறன் மற்றும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் பை-டைரெக்ஷனல் குவிக் ஷாப்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
Related Tags :