ஆட்டோமொபைல்
ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6

ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடல் அறிமுகம்

Published On 2020-11-11 08:32 GMT   |   Update On 2020-11-11 08:32 GMT
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது.
 

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 1,15,715 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய புகை விதிகளுக்கும் பொருந்தும் அப்டேட் தவிர இந்த மோட்டார்தைக்கிள் புதிதாக பியல் பேட்லெஸ் வைட் எனும் நிறத்தில் கிடைக்கிறது. இதுதவிர ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் பேந்தர் பிளாக் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. 



மேம்பட்ட பிஎஸ்6 மாடலில் 199.6சிசி சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 17.8 பிஹெச்பி பவர், 16.4 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. 

பிஎஸ்6  ரக என்ஜின் புதிய நிறம் தவிர ஹீரோ எக்ஸ்டிரீம் 200எஸ் பிஎஸ்6 மாடலில் வேறு எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
Tags:    

Similar News