ஆட்டோமொபைல்

ஜாவா மோட்டார்சைக்கிகள் முன்பதிவு விவரம்

Published On 2018-12-01 11:32 GMT   |   Update On 2018-12-01 11:32 GMT
ஜாவா மோட்டார்சைக்கிள் நிறுவன விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவினை இம்மாதம் துவங்க இருக்கின்றன. #jawa #motorcycle



இந்தியா முழுக்க ஜாவா விற்பனையாளர்கள் புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவினை டிசம்பர் 15ம் தேதி முதல் துவங்க இருக்கின்றன. ஜாவா வலைதளத்தில் வாடிக்கையாளர்கள் அவரவர் விரும்பும் மாடல்களுக்கு ரூ.5,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியா முழுக்க 100 விற்பனையாளர்களை ஜாவா மோட்டார்சைக்கிள் தனது வலைதளத்தில் பட்டியலிட்டுள்ளது. இந்த விற்பனை மையங்கள் டிசம்பர் 15ம் தேதி முதல் பணிகளை துவங்க இருக்கின்றன. பயனர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களை முன்பதிவு செய்யும் முன், அவற்றை நேரடியாக பார்த்து, சோதனை முறையில் ஓட்டிப் பார்க்கும் வசதி வழங்கப்படுகிறது.



புதிய ஜாவா மோட்டார்டைக்கிள்களின் விநியோகம் ஜனவரி மாதத்தில் துவங்கும் என்றும், ஆன்லைனில் முன்பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் விநியோகம் செய்யப்பட இருக்கிறது. அந்த வகையில் ஜாவா விற்பனையாளர்களிடம் முன்பதிவு செய்வோர் தங்களது வாகனத்தை பெற சிலகாலம் காத்திருக்க வேண்டும்.

இந்தியாவில் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ஜாவா (ரூ.1.64 லட்சம்), ஜாவா ஃபார்டி டூ (ரூ.1.55 லட்சம்) மற்றும் பெராக் (ரூ.1.89 லட்சம்) என மூன்று மாடல்களை அறிமுகம் செய்த நிலையில், பெராக் மாடல் மட்டும் அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Tags:    

Similar News