ஆட்டோ டிப்ஸ்

காரின் விலையே இவ்வளவு தான் - சரி செய்ய ரூ. 22 லட்சம் பில் போட்டு ஷாக் கொடுத்த போக்ஸ்வேகன்

Published On 2022-09-26 11:31 GMT   |   Update On 2022-09-26 11:31 GMT
  • போக்ஸ்வேகன் சர்வீஸ் மையம் ஒன்று தனது வாடிக்கையாளருக்கு கொடுத்த கட்டண ரசீது வைரல் ஆகி வருகிறது.
  • கார் சரி செய்யும் விவகாரத்தில் ஏற்கனவே பல முறை இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

இந்தியாவில் செயல்பட்டு வரும் போக்ஸ்வேகன் சர்வீஸ் மையங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிக தொகையை பில் செய்து பல முறை சர்ச்சியில் சிக்கியுள்ளன. அந்த வரிசையில், தற்போது போக்ஸ்வேகன் போலோ மாடலை சரி செய்ய அதிகாரப்பூர்வ சர்வீஸ் மையம் ஒன்று ரூ. 22 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்து அதிர்ச்சி அளித்து இருக்கிறது. இதில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் தனது அனுபவத்தை லின்க்டுஇன் தளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

பெங்களூரில் வசித்து வரும் அனிருத் கனேஷ் என்பவர் போக்ஸ்வேகன் போலோ TSI மாடலை பயன்படுத்தி வருகிறார். சமீபத்திய பெங்களூரு வெள்ளத்தில் போக்ஸ்வேகன் போலோ சேதமடைந்து விட்டது. இதை அடுத்து அனிருத் பெங்களூரை அடுத்த வைட்பீல்டில் உள்ள போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சர்வீஸ் மையத்திற்கு தனது போலோ காரை சரி செய்ய எடுத்துச் சென்றார். சேதமடைந்த காரை எடுத்துச் செல்ல இரவு நேரத்தில் யாரும் வரவில்லை என அனிருத் குறிப்பிட்டுள்ளார்.


வைட்பீல்டு வொர்க்‌ஷாப்பில் அனிருத்தின் போக்ஸ்வேகன் போலோ கார் 20 நாட்கள் வைக்கப்பட்டு இருந்தது. அதன் பின் போக்ஸ்வேகன் ஆப்பிள் ஆட்டோ சார்பில் அதிகாரி அனிருத்தை தொடர்பு கொண்டு காரை சரி செய்ய ரூ. 22 லட்சம் வரை செலவாகம் என தெரிவித்து இருக்கிறார். இதன் பின் கார் இன்சூரன்ஸ் நிறுவனத்தை அனிருத் தொடர்பு கொண்டார். இன்சூரன்ஸ் நிறுவனம் காருக்கு முழு சேதமடைந்து விட்டதாக குறிப்பிட்டு, காரை சர்வீஸ் மையத்தில் இருந்து எடுத்துச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.

காரின் தரவுகளை சேகரிக்க அனிருத் காரின் விற்பனையகம் சென்றார். அங்கு அவரிம் ரூ. 44 ஆயிரத்து 840 கட்டண ரசீது கொடுத்து மீண்டும் ஷாக் கொடுத்துள்ளனர். பின் இந்த பிரச்சினையை போக்ஸ்வேகன் வாடிக்கையாளர் சேவை மையத்திம் அனிருத் தெரிவித்து இருக்கிறார். இதனை 48 மணி நேரத்தில் சரி செய்வதாக அனிருத்திடம் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது பிரச்சினை சரி செய்யப்படவில்லை.

போக்ஸ்வேகன் போலோ காரை ரூ. 11 லட்சம் கொடுத்து வாங்கிய அனிருத் அதனை சரி செய்ய தனக்கு ரூ. 22 லட்சம் வரை ஆகும் என சர்வீஸ் செண்டர் அதிகாரிகள் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின் அனிருத்தை தொடர்பு கொண்ட போக்ஸ்வேகன் அவரிடம் ரூ. 5 ஆயிரம் செலுத்த வலியுறுத்தி உள்ளது.

Tags:    

Similar News