ஆட்டோ டிப்ஸ்

35 கிமீ மைலேஜ் கொண்ட மாருதி சுசுகி ஸ்விப்ட் - எப்போ வெளியாகுது தெரியுமா?

Published On 2022-11-12 10:48 GMT   |   Update On 2022-11-12 10:48 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • புதிய ஸ்விப்ட் மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 35 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஹைப்ரிட் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்தியாவில் தனது முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் கார் - கிராண்ட் விட்டாரா மாடலை தொடர்ந்து ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இரு கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், மாருதி சுசுகி ஹைப்ரிட் வேரியண்ட்களையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அதிக மைலேஜ் கொண்ட ஹேச்பேக் மற்றும் செடான் மாடல்கள் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் வெளியீடு 2024 முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. புதிய ஹைப்ரிட் வெர்ஷனில் முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Z12E எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் தற்போதைய K12C என்ஜினை போன்று இருக்காது. இந்த எனிஜினுடன் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இதே தொழில்நுட்பம் தான் கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்களிலும் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News