ஆட்டோ டிப்ஸ்

விரைவில் இந்தியா வரும் மாருதி சுசுகி Fronx எலெக்ட்ரிக் கார் - அசத்தல் டீசர் வெளியீடு!

Published On 2023-01-30 13:12 GMT   |   Update On 2023-01-30 13:12 GMT
  • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய மாருதி சுசுகி Fronx காருக்கான டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

டாடா நெக்சான் EV மாடலுக்கு போட்டியாக மஹிந்திரா XUV400 மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மாருதி சுசுகி நிறுவனம் தன் பங்கிற்கு புது எலெக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய Fronx எலெக்ட்ரிக் கார் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது.

2030 வாக்கில் இந்திய சந்தையில் ஆறு முற்றிலும் புது எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டுள்ளது. இவற்றில் முதல் மாடலாக Fronx காம்பேக்ட் கிராஸ்ஒவர் எஸ்யுவி சமீபத்திய ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் Fronx மாடலின் ஆல்-எலெக்ட்ரிக் வெர்ஷன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது.

தற்போது புதிய மாருதி சுசுகி Fronx EV மாடலின் விவரங்கள் மர்மமாகவே உள்ளது. டிசைனை பொருத்தவரை புதிய Fronx EV மாடல் அதன் பெட்ரோல் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் வெர்ஷனுக்கு முன் Fronx பெட்ரோல் மாடல் வரும் வாரங்களில் விற்பனையகம் வர இருக்கிறது.

ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட Fronx EV மாடல் டூயல் டோன் பிளாக் மற்றும் பர்பில் நிற இருக்கை மேற்கவர்களை கொண்டுள்ளது. உபகரணங்களை பொருத்தவரை ஹெட்-அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜர், 9 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி பார்கிங் கேமரா வழங்கப்படுகிறது.

மாருதி சுசுகி Fronx EV மாடலில் வழங்கப்பட இருக்கும் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. எனினும், இதன் ஒட்டுமொத்த டிரைவிங் ரேஞ்ச் மற்றும் செயல்திறன் டாடா நெக்சான் EV மற்றும் மஹிந்திரா XUV400 மாடல்களுக்கு போட்டியளிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News