ரூ. 10 காயின் கொடுத்து ஸ்கூட்டர் வாங்கிய நபர்
- சமீப காலங்களில் வாகனம் வாங்க காயின் மூலம் பணம் செலுத்தும் வழக்கம் வைரலாகி வருகிறது.
- இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பலமடங்கு அதிகரித்தாலும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.
இந்தியாவில் யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் ஒவ்வொரு நாளும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பரவலாக இந்த முறையில் பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், முதியவர்கள் தொடர்ந்து ரொக்கம் மற்றும் சில்லறை காயின்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நபர் ஒருவர் தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை முழுக்க ரூ. 10 காயின்களாக கொடுத்து இருக்கிறார். ருத்ராபூரை சேர்ந்த நபர் முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை 5 ஆயிரம் ரூ. 10 காயின்களாக கொடுத்து பணம் செலுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பெரிய தொகையை காயின்களாக கொடுக்கும் முறை ஏற்கனவே சிலர் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக காயின்களை மூட்டை மற்றும் பெட்டிகளில் எடுத்து வந்து செலுத்திய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காயின் மூலம் பணம் செலுத்துவது சட்டப்பூர்வமான ஒன்று தான் என்ற போதிலும், காயின்களை முழுமையாக எண்ணி முடிக்க அதிக நேரம் ஆகும். இதன் காரணமாக அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை காயின்களாக செலுத்த டீலர்கள் வரையறை வைத்துள்ளனர்.
இந்தியாவில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 246 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த நபர் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் எந்த வேரியண்டை தேர்வு செய்தார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.