ஆட்டோ டிப்ஸ்

18 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த எலெக்ட்ரிக் கார்

Update: 2022-06-29 07:56 GMT
  • சிட்ரோயன் நிறுவனம் மினி லிமிடெட் எடிஷன் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
  • இந்த கார் விற்பனையில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது.

சர்வதேச சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் சிட்ரோயன் பிராண்டு அதிக கவனம் செலுத்தி வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் இந்திய சந்தையிலும் விரைவில் சிட்ரோயன் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், சிட்ரோயன் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் மினி எலெக்ட்ரிக் கார்கள் 18 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தன. இதனை சிட்ரோயன் பிராண்டின் தாய் நிறுவனம் ஸ்டெலாண்டிஸ் தெரிவித்து இருக்கிறது. "சாரி எலான், ஒன்றை பெறுவதற்கு ஒரே வழி எங்களை வாங்குவது மட்டும் தான்," என சிட்ரோயன் நிறுவனம் பாரிஸ் கார் டி எஸ்ட் ரெயில் நிலையத்தின் பில் போர்டில் எழுதி வைத்து இருக்கிறது.


2020 ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமானது முதல் மொராக்கோ, ஐரோப்பா மற்றும் துருக்கியில் இதுவரை 22 ஆயிரம் சிறிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை சிட்ரோயன் விற்பனை செய்துள்ளது. இந்த கார் மொராக்கோவில் உற்பத்தி செய்யப்பட்டது. இவற்றை ஓட்ட ஓட்டுனர் உரிமம் தேவையில்லை. மேலும் இந்த கார் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

லிமிடெட் எடிஷன் "My Ami Buggy" வெர்ஷனில் ரூஃப் கேன்வாஸ் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதனை விரும்பிய போது சுருட்டி வைத்துக் கொள்ளலாம். மேலும் இந்த காரில் கதவுகளுக்கு பதில் டியூப் கேட்கள் உள்ளன. இந்த காரின் விலை 9 ஆயிரத்து 790 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 8 லட்சத்து 11 ஆயிரத்து 395 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News