ஆட்டோ டிப்ஸ்

கிராண்ட் செரோக்கி விலையை ரூ. 1 லட்சம் உயர்த்திய ஜீப்!

Update: 2023-03-11 11:03 GMT
  • ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடல் ஒற்றை வேரியண்டில் விற்பனை செய்யப்படுகிறது.
  • கிராண்ட் செரோக்கி மாடலில் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் உள்ளது.

ஜீப் இந்தியா நிறுவனம் தனது கிராண்ட் செரோக்கி விலையை அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. ஜீப் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதன் விலை தற்போது ரூ. 1 லட்சம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. விலை உயர்வை தொடர்ந்து ஜீப் கிராண்ட் செரோக்கி விலை ரூ. 78 லட்சத்து 50 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது.

கிராண்ட் செரோக்கி மாடலில் 7-பாக்ஸ் முன்புற கிரில், கிளாம்ஷெல் பொனெட், 20 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் 5-சீட் எஸ்யுவி-யாக கிடைக்கிறது. இந்த காரில் 10.2 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், பானரோமிக் சன்ரூஃப் உள்ளது.

 

ஜீப் கிராண்ட் செரோக்கி மாடலில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 268 ஹெச்பி பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், பேடில் ஷிஃப்டர்கள் உள்ளன.

இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் ஜீப் நிறுவனம் தனது ஜீப் ராங்ளர் மற்றும் மெரிடியன் மாடல்கள் விலையை உயர்த்தியது. இதில் மெரிடியன் மாடலின் அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரு. 20 ஆயிரமும், ராங்ளர் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 20 ஆயிரமும் உயர்த்தப்பட்டது.

விலை உயர்வை அடுத்து இரு கார்களின் விலை தற்போது ரூ. 30 லட்சத்து 10 ஆயிரமும், ரூ. 59 லட்சத்து 05 ஆயிரம் என மாறி இருக்கிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News