ஆட்டோ டிப்ஸ்

ஹோண்டா பைக்கிற்கு ரூ. 50 ஆயிரம் விலை குறைப்பு!

Published On 2022-12-17 16:49 IST   |   Update On 2022-12-17 16:49:00 IST
  • ஹோண்டா CB300F மோட்டார்சைக்கிளின் இந்திய விலையில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
  • இந்த மோட்டார்சைக்கிளில் உள்ள 293சிசி என்ஜின் 24.1 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் தனது CB300F மோட்டார்சைக்கிளுக்கு அசத்தல் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. ஹோண்டா பிக் விங் விற்பனை மையங்கள் CB300F மாடலின் விலையில் ரூ. 50 ஆயிரம் குறைத்துள்ளன. ஆகஸ்ட் மாத அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 26 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரம் என நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போதைய விலை குறைப்பை அடுத்து ஹோண்டா CB300F மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என மாறி இருக்கிறது. விலை அடிப்படையில் புதிய ஹோண்டா 300 சிசி மோட்டார்சைக்கிள் கேடிஎம் 125 டியூக் மாடலை விட குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி ஸ்டாக் இருக்கும் வரை மட்டுமே வழங்கப்பட இருக்கிறது.

ஹோண்டா CB300F மாடலில் 293சிசி, நான்கு வால்வுகள் கொண்ட ஆயில் கூல்டு, SOHC என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.1 ஹெச்பி பவர், 25.6 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. சஸ்பென்ஷனுக்கு முன்புறம் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள், பின்புறம் 5-ஸ்டெப் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் யூனிட் வழங்கப்பட்டுள்ளது.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 276mm டிஸ்க், பின்புறம் 220mm டிஸ்க் வழஙஅகப்பட்டு இருக்கிறது. ஹோண்டா CB300F மாடலில் எல்இடி ஹெட்லேம்ப், ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், டூயல் சேனல் ஏபிஎஸ், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஹோண்டா செலக்டபில் டார்க் கண்ட்ரோல், அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News