ஆட்டோ டிப்ஸ்

பண்டிகை கால சலுகைகளை அறிவித்த ஹீரோ மோட்டோகார்ப்

Update: 2022-09-27 11:39 GMT
  • ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது இருசக்கர வாகனங்களுக்கு பண்டிகை கால சிறப்பு சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
  • இந்த சலுகைகளின் கீழ் சிறப்பு நிதி சலுகைகள், முன்பதிவு சலுகை என பல்வேறு பலன்களை உள்ளடக்கியதாகும்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஹீரோ கிப்ட் - கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆப் டிரஸ்ட் பெயரில் புது திட்டத்தை அறிவித்து இருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சீரான அப்டேட், சில்லறை பலன்கள், நிதி சலுகைகள், முன்பதிவு சலுகைகள் என ஏராளமான பலன்களை வழங்குகிறது.

இந்த சலுகைகளின் கீழ் ஹீரோ ஸ்பிலெண்டர் பிளஸ் மாடல் சில்வர் நெக்சஸ் புளூ நிறத்திலும், ஹீரோ கிளாமல் மாடல் கேன்வாஸ் ரெட் நிறத்திலும் கிடைக்கின்றன. இத்துடன் ஹீரோ ஹெச்எப் டீலக்ஸ் மாடல் கோல்டு ஸ்டிரைப்களுடனும், பிளெஷர் பிளஸ் எக்ஸ்-டெக் மாடல் போல் ஸ்டார் புளூ நிறத்திலும் கிடைக்கின்றன. இதேபோன்று ஹீரோ எக்ஸ்டிரீம் 160R மாடல் ஸ்டெல்த் 2.0 எடிஷனில் கிடைக்கிறது.

புது மாடல்கள் தவிர ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் காப்பீடு திட்ட பலன்கள், எளிய நிதி சலுகைகள், குறைந்த முன்பணம், மாத தவணை முறை வசதி, ஐந்து வருடங்களுக்கு ஸ்டாண்டர்டு வாரண்டி, ரொக்க பலன்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. ஹீரோ ஸ்கூட்டர்களுக்கு ரூ. 13 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, ரூ. 3 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள வவுச்சர்கள், ஐந்து வருட வாரண்டி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 5 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News