ஆட்டோ டிப்ஸ்

இந்திய டெஸ்டிங்கில் சிக்கிய சிட்ரோயன் C3 EV

Update: 2022-09-28 11:31 GMT
  • சிட்ரோயன் நிறுவனம் இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார் மாடல்களை வெளியிடுவதை ஏற்கனவே அறிவித்து விட்டது.
  • புதிய சிட்ரோன் C3 EV மாடலுக்கான டெஸ்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

சிட்ரோயன் நிறுவனம் தனது C3 ஹேச்பேக் காரின் எலெக்ட்ரிக் வேரியண்டை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்யும் திட்டத்தை சிட்ரோயன் ஏற்கனவே அறிவித்து விட்டது. இந்த நிலையில், சிட்ரோயன் C3 EV மாடல் சோதனை இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை உறுதிப்படுத்தும் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களின் படி சிட்ரோயன் C3 EV மாடலின் முன்புறம் வலது புற பெண்டர் பகுதி மட்டும் மறைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த காரின் வலதுபுற பெண்டரில் சார்ஜிங் போர்ட் வழங்கப்படலாம். இந்த எலெக்ட்ரிக் காரில் ஆல்-பிளாக் பம்ப்பர், ட்வின் ஸ்லாட் கிரில் பகுதியில் வைட் பினிஷ் செய்யப்பட்டு உள்ளது.

புதிய சிட்ரோயன் C3 EV மாடலின் பவர்டிரெயின் விவரங்கள் மர்மமாகவே உள்ளன. எனினும், முந்தைய தகவல்களின் படி இந்த காரில் 50 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படலாம். இந்த பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 300 கிமீ வரையிலான ரேன்ஜ் கிடைக்கும். இந்த கார் பற்றிய இதர விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Photo Courtesy: TeamBHP

Tags:    

Similar News