ஆட்டோமொபைல்
போக்ஸ்வேகன் போலோ

விரைவில் போக்ஸ்வேகன் போலோ மற்றும் வென்டோ மாடல்கள் விலையிலும் மாற்றம்

Published On 2020-12-26 15:52 IST   |   Update On 2020-12-26 15:52:00 IST
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் போலோ மற்றும் வென்டோ மாடல்களின் விலை விரைவில் மாற்றப்பட இருக்கிறது.


போக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் தனது போலோ மற்றும் வென்டோ மாடல்களின் விலையை ஜனவரி 2021 முதல் 2.5 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. கார் மாடல்களுக்கான உற்பத்தி செலவு அதிகரித்து வருவதால் விலை உயர்வு அறிவிக்கப்படுகிறது என போக்ஸ்வேகன் தெரிவித்து இருக்கிறது.



அதன்படி போக்ஸ்வேகன் கார்களின் விலை 2.5 சதவீதம் வரை உயர்த்தப்படுகிறது. புத்தாண்டு முதல் மேம்பட்ட விலை பட்டியலை போக்ஸ்வேகன் வெளியிட இருக்கிறது. கார் மாடல்களின் விலை ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் ஏற்ப வேறுபடும் என தெரிகிறது.

முன்னதாக எம்ஜி மோட்டார் இந்தியா, இசுசு, நிசான், டேட்சன், ரெனால்ட் என பல்வேறு கார் உற்பத்தியாளர்களும் விலை உயர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளன. பிஎம்டபிள்யூ போன்று பிரீமியம் நிறுவனங்களும் விலை உயர்வை அமலாக்க இருப்பதாக தெரிவித்து இருக்கின்றன. 

Similar News