ஆட்டோமொபைல்
மஹிந்திரா

கார் மாடல்களுக்கு ரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகை அறிவித்த மஹிந்திரா

Published On 2020-12-15 11:04 GMT   |   Update On 2020-12-15 11:04 GMT
மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு ரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது.


மஹிந்திரா நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு தள்ளுபடி, சலுகை மற்றும் வருட இறுதி பலன்களை அறிவித்து இருக்கிறது. அதன்படி தள்ளுபடி மற்றும் சலுகைகள் ரூ. 20 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 3.06 லட்சம் வரை அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி மஹிந்திரா பொலிரோ மாடலுக்கு ரூ. 20,550 வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா எக்ஸ்யுவி500 மற்றும் ஸ்கார்பியோ மாடல்களுக்கு முறையே ரூ. 56,760 மற்றும் ரூ. 60 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. 



மஹிந்திரா கேயுவி100 என்எக்ஸ்டி மாடலுக்கு ரூ. 62,055 மதிப்பிலான சலுகைகளும், மராசோ எம்பிவி மாடலுக்கு ரூ.  41 ஆயிரம் வரையிலான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. மஹிந்திரா எக்ஸ்யுவி300 மாடலுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

இறுதியில் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மாடலுக்கு ரூ. 3.06 லட்சம் வரையிலான சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் நேரடி தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் கார்ப்பரேட் பலன்கள் என பலவிதங்களில் பிரித்து வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News