ஆட்டோமொபைல்
அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160

இந்தியாவில் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 உற்பத்தி விரைவில் துவக்கம்

Published On 2020-11-28 10:42 GMT   |   Update On 2020-11-28 10:42 GMT
பியாஜியோ நிறுவனத்தின் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடல் உற்பத்தி இந்தியாவில் துவங்க இருக்கிறது.


பியாஜியோ இந்தியா நிறுவனம் தனது அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலின் உற்பத்தி விரைவில் இந்தியாவில் துவங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் பூனேவில் உள்ள பாரமதி ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. 

இத்துடன் அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 புதிதாக புளூ நிறத்திலும் கிடைக்கும் என பியாஜியோ அறிவித்து இருக்கிறது. இந்த ஸ்கூட்டரை பியாஜியோ 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. அப்போது இந்த மாடல் சிவப்பு நிற பெயின்டிங் மற்றும் பிளாக் இன்சர்ட்களை கொண்டிருந்தது.



அப்ரிலியா தனது எஸ்எக்ஸ்ஆர் 160 மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் ஏற்கனவே வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி இருக்கிறது.

சத்திவாய்ந்த அப்ரிலியா எஸ்எக்ஸ்ஆர் 160 மாடலில் 160சிசி என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இதே என்ஜின் அப்ரிலியா எஸ்ஆர் 160 பிஎஸ்6 ஸ்கூட்டரிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின 10.8 பிஹெச்பி பவர், 11.6 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
Tags:    

Similar News