ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

கிராஷ் டெஸ்டில் அசத்திய மஹிந்திரா தார்

Published On 2020-11-27 11:13 GMT   |   Update On 2020-11-27 11:13 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் புதிய தார் மாடல் கார் கிராஷ் டெஸ்டில் அசத்தி இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.

மஹிந்திரா நிறுவனத்தின் புத்தம் புதிய தார் மாடல் குளோபல் NCAP கிராஷ் டெஸ்ட் சோதனையை எதிர்கொண்டது. இதில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் பாதுகாப்பில் புதிய தார் மாடல் நான்கு நட்சத்திர புள்ளிகளை பெற்று இருக்கிறது.

புதிய மஹிந்திரா தார் மாடல் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17-க்கு 12.52 புள்ளிகளை பெற்று இருக்கிறது. சிறுவர்கள் பாதுகாப்பிற்கு 49-க்கு 41.11 புள்ளிகளை பெற்று இருக்கிறது.  அந்த வகையில் புதிய தார் மாடல் இந்தியாவின் பாதுகாப்பான ஆப் ரோடர் எஸ்யுவி மாடல் ஆகும்.



இந்தியாவில் மஹிந்திரா எக்ஸ்யுவி300 தவிர சிறுவர் பாதுகாப்பிற்கு 4 நட்சத்திர புள்ளிகளை பெற்ற ஒரே கார் மாடலாக புதிய தார் இருக்கிறது. இந்த எஸ்யுவி மாடல் ஸ்டான்டர்டு பாதுகாப்பு உபகரணங்களுடன் சோதனை செய்யப்பட்டது.

புதிய மஹிந்திரா தார் மாடலில் டூயல் ஏர்பேக், ஏபிஎஸ், சீட்பெல்ட் பிரீ-டென்ஷனர்கள், ISOFIX சைல்டு சீட் ஆங்கரேஜ்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News