ஆட்டோமொபைல்
இவி சார்ஜிங்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்க அதிரடி திட்டம் தயார்

Published On 2020-11-24 10:42 GMT   |   Update On 2020-11-24 10:42 GMT
இந்தியா முழுக்க சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பங்க்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.


இந்தியா முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை பெருமளவு மேம்படுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் நாடு முழுக்க சுமார் 69 ஆயிரம் பெட்ரோல் பம்ப்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்பட இருக்கிறது.

இதனை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்து இருக்கிறார். இந்த அறிவிப்பை அவர் 2020 மின் வாகனங்கள் பற்றிய ஆன்லைன் மாநாட்டில் வெளியிட்டார். எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.



பெட்ரோல் பம்ப்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதற்கான காலக்கெடு பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. 

மின்சார வாகனங்களை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை அவர் பட்டியலிட்டார். அதன்படி சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீதமாக குறைத்தது மற்றும் பேட்டரி விலை மற்றும் வாகனத்தின் விலையை தனியாக பிரித்தது உள்ளிட்டவைகளை அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News