போர்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை சொந்தமாக உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சொந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யும் போர்டு
பதிவு: நவம்பர் 21, 2020 15:25
போர்டு
உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுனங்கள் எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளன. இந்நிலையில், போர்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரிகளை சொந்தமாக உற்பத்தி செய்ய இருக்கிறது.
புதிய தகவலை போர்டு மோட்டார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜிம் பேர்லி தெரிவித்தார். பேட்டரி உற்பத்தி பற்றிய பேச்சுவார்த்தை அதிகாரிகள் மத்தியில் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஏற்கனவே டெஸ்லா மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு சொந்தமாக பேட்டரிகளை உற்பத்தி செய்து வருகின்றன. இந்த வரிசையில் தற்சமயம் போர்டு இணைய இருக்கிறது.
Related Tags :