ஆட்டோமொபைல்
டாடா ஹெச்பிஎக்ஸ்

தொடர் சோதனையில் டாடா ஹெச்பிஎக்ஸ் - இணையத்தில் வெளியான புது ஸ்பை படங்கள்

Published On 2020-11-19 10:39 GMT   |   Update On 2020-11-19 10:39 GMT
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெச்பிஎக்ஸ் மாடல் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யுவி மாடலினை குளிர் பிரதேசங்களில் சோதனை செய்து வருகிறது. புதிய ஹெச்பிஎக்ஸ் மாடல் இமாச்சல பிரதேசத்தில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

முன்னதாக டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் லே மற்றும் மணாலி நெடுஞ்சாலையில் சோதனை செய்யப்படுகிறது.



சோதனை செய்யப்படும் ஹெச்பிஎக்ஸ் மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. டாடா ஹெச்பிஎக்ஸ் மாடல் அந்நிறுவனத்தின் ஆல்பா ஆர்கிடெக்ச்சர் மற்றும் இம்பேக்ட் 2 வடிவமைப்பில் உருவாகி இருக்கிறது. இதன் ப்ரோடக்ஷன் மாடல் டிமெரோ என அழைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ஹெச்பிஎக்ஸ் என்கிற ஹான்பில் மாடல் 2021 மே மாத மாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்த மாடல் முன்கூட்டியே இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

Tags:    

Similar News