துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் 31.8.2025 முதல் 6.9.2025 வரை

Published On 2025-08-31 10:58 IST   |   Update On 2025-08-31 10:59:00 IST

31.8.2025 முதல் 6.9.2025 வரை

தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்ச ரிக்கிறார். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு, உயரிய கவுரவத்தை அடையும் நேரம்.நடக்குமா என்ற நிலையில் இருந்த காரியத்தை மன உறுதியுடன் தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள்.

சிலருக்குப் புதுப் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். புதிய தொழில் நண்பர்கள் சேர்க்கை, தொழில் லாபம் ஆகியவை ஏற்படும். அரசியல் அரசு சார்ந்த தொழில், அரசுப் பணியாளர்களுக்கு பண மழை பொழியும். வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள்.புத்திர பாக்கியம். வீடு வாகன யோகம் என சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

கணவன் மனைவி இருவரும் மனமொன்றி நடந்து கொள்வார்கள். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும். குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பெண்கள் யாருக்கும் நகைகளை இரவல் கொடுக்க கூடாது. பிரதோஷ நாட்களில் சந்தனம் அபிஷேகம் செய்து வழிபடுவதால் மனஅமைதி கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News