துலாம் - வார பலன்கள்

வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை

Published On 2025-09-14 16:11 IST   |   Update On 2025-09-14 16:11:00 IST

14.9.2025 முதல் 20.9.2025 வரை

புதிய வளர்ச்சிக்கான பாதை தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். இன்சூரன்ஸ், சீட்டு பணம், பங்குச் சந்தை, தொழில் ஆதாயம் என பல வகைகளில் வருமானம் உண்டாகும். நீதிமன்ற வழக்குகள் ஒத்திப் போகும். சகோதர, பங்காளி கருத்து வேறுபாடு நீங்கும்.

உறவுகளின் வருகையால் குடும்பத்தில் குதூகலம் கூடும். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் மீண்டும் இணைந்து குடும்பம் நடத்துவார்கள். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். திருமணத் தடைகள் அகலும். மனம் விரும்பிய வாழ்க்கைத் துணை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும்.

14.9.2025 அன்று இரவு 8.03க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிலர் கட்டுப்படுத்த முடியாத ஈகோ மற்றும் கோப உணர்வினால் தேவையற்ற வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பகையை வளர்ப்பார்கள். எனவே பேச்சில் நிதானம் தேவை. மகாளய பட்ச காலங்களில் சுமங்கலி பெண்களுக்கு மங்களப் பொருள்கள் வழங்கி நல்லாசி பெற பெண் சாபங்கள் விலகும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News