விவேகமான மிதுன ராசியினரே
பங்குனி மாத துவக்கத்தில் வக்ரகதியில் இருக்கும் உங்கள் ராசி அதிபதி புதன் பங்குனி 6 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். மாத இறுதியில் பங்குனி 27ல் மீன ராசியில் நீசம் அடைகிறார். பல்வேறு சோதனைகள் சாதனையாகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும். தைரியம் ,தெம்பு உருவாகும். அழியாத புகழ் உருவாகும். உடன் பிறந்தவர்களுடன் நல்லிணக்கம் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அன்பும், ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.
சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். இதுவரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொலிவு ஏற்படும். தன வரவு இரட்டிப்பாகும்.
சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். இதுவரை வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு கட்டி குடிபுகும் ஆர்வம் மிகும். உங்கள் எண்ணம் போல் வீடு, வாகன யோகம் அமையும். சிலர் வீட்டை புதுப்பித்து நவீனமயமாக்குவர்கள். 2 சக்கர வாகனம் வைத்து இருப்பவர்கள் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள். தாயருக்கு சிறு, சிறு உடல் நலக் குறைவு ஏற்படலாம். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆறுதலும் கிடைக்கப் பெறும். தாய் வழி உறவினர் மூலம் தன வரவு வரும். தாய் வழி குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். பொறுப்பு மிக்க பதவிகள் உங்களை தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படும். சுமாராக படித்தவர்கள் கூட நல்ல மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். குடும்பத்துடன் சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். குல தெய்வ,இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மன அமைதி அடைவீர்கள். மனம் தனிமையை நாடும். பாவம் எது? புண்ணியம் எது?வாழ்நாளில் மனிதன் எப்படி வாழ வேண்டும் போன்ற சிந்தனைகள் தோன்றும்.
மோட்சம் அடையும் மார்க்கத்தில் ஈடுபடும் ஆர்வம் மிகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு. திருமண வயதில் இருக்கும் உங்களின் மகள், மகனின் திருமணத்தை சீரோடும் சிறப்போடும் நடத்துவீர்கள். பல வருடங்களாக தடைபட்ட எண்ணற்ற சுப நிகழ்வுகள் நடைபெறும். உங்களின் காதல் விசயம் பெற்றோருக்கு தெரிய வரும். பல்வேறு போராட்டத்திற்கு பிறகு காதல் திருமணம் நடைபெறும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும். புத்திர பிரார்த்தம் உண்டாகும்.
குருமங்கள யோகம்
ராசியில் சஞ்சரிக்கும் 7,10 ம் அதிபதி குருவை 6,11ம் அதிபதி செவ்வாய் நான்காம் பார்வையால் பார்க்கிறார் இது குருமங்கள யோகமாக பலன் தரும். தான தர்மங்களில் நாட்டம் மிகும். ஆசை, பேராசை, எதார்த்தம் இந்த மூன்றில் எது நிராந்தரமாக மனிதனை வழி நடத்தும் என்ற உண்மை புரியும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எனினும் தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெரும் எண்ணம் தோன்றும். யாருக்கேனும் ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கி கொள்ள கூடாது. விற்கப்பட வேண்டிய சொத்தாக இருந்தால் நல்ல விலைக்கு விற்க முடியும். பூர்வீகம் சென்று உற்றார், உறவினரை கண்டு மகிழ்வீர்கள். வேகம் கலந்த விவேகத்துடன் செயல்பட்டு சந்தோஷ மழையில் நனையப் போகிறீர்கள். பட்டங்களும் பதவிகளும் தேடி வரும். அரசியல் பிரமுகர்கள், முக்கியஸ்தர்கள், பெரிய மனி தர்களின் நட்பு கிடைக்கும். தேங்கி கிடந்த பழைய பணிகள் மளமளவென முடியும். சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கௌரவமும் கிடைக்கும்.
பொருளாதாரம்
புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும். வாழ்க்கை வளமாகும். கட்ட முடியாத வீட்டை கட்ட முடியும். விற்க முடியாத சொத்தை விற்க முடியும். தொழில், வியாபார அபிவிருத்தி, பண வரவு என அனுகூலமான பலன்களை பெறுவார்கள். தேவைகள் அனைத்தும் நிறைவேறும். விட்டதை பிடிக்கும் நேரம் என்று கூட கூறலாம். கடன்கள் நிவர்த்தியாகும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ முடியும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் எதிர்பாராத உதவிகளும் உங்களை மகிழ்விக்கும் காலமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்த தகுந்த வைத்திய உதவிகள் கிடைக்கும்.
முதலீட்டாளர்கள்
புதிய தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். உங்களுக்கு தெரிந்த நன்கு பரிட்சயமான தொழிலே சிறக்கும். நல்ல வருமானம் கிடைக்கும். எல்லாத் துறையை சேர்ந்தவர்களுக்கும் லாபம் அடைய வாய்ப்பு உள்ளது. கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்று கருத்து மறையும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். அரசின் சலுகைகள், மானியங்கள் எளிதில் கிடைக்கும். அல்லது சம்பளம் வாங்காமல் பொதுக் காரியங்களில் ஈடுபட்டு தங்களின் செல்வாக்கை உயர்த்திக் கொள்ப வர்களுக்கு பாதிப்பு இல்லை. தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களும் முறையாக வைத்து இருக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இல்லாத தொழில் உங்களை சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும்.சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும்.
உத்தியோகஸ்தர்கள்
வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும் அல்லது பணி நிமித்தமாக நீங்கள் வேலை பார்க்கும் கம்பெனியின் மூலம் வெளிநாடு சென்று வருவீர்கள். ஒரு சிலருக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும். உங்கள் பணிகளை சிறப்பாக செய்து அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் காப்பாற்றுவீர்கள். எப்போது விடிவு காலம் வரும் என்று காத்து இருந்த உங்களுக்கு விடிவு காலம் வந்து விட்டது. சுயதொழில் செய்பவர்கள் தொழிலை விரிவு படுத்தும் வாய்ப்பு உருவாகும். தொழில் நிலவி வந்த மந்த நிலை மாறும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும். பலருக்கு சொந்த ஊருக்கு பணி மாற்றம் கிடைக்கும்.
பெண்கள்
முன்னேற்றமான காலம். ஆளுமைத் திறன் மேம்படும். வீடு, மனை என சொத்துக்கள் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள். வீட்டை விரிவு செய்தல், புதிய வீடு கட்டுதல் என உங்கள் சிந்தனை எதிர்காலத்தை நோக்கியே இருக்கும். எதிர்பார்த்த அனைத்து வழிகளிலும் வரவுகள் இருக்கும். சுய தொழிலில் நிலவிய சங்கடங்கள், குறுக்கீடுகள் விலகும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம்.அலுவலகத்தில் உங்கள் மீது ஏற்பட்ட வீண் பழி விலகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். சுப நிகழ்வுகள் மங்களகரமாக நடக்கும். நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். கணவன் மனைவி ஊடல் கூடலாக மாறும். புகழ்மிக்க ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்வீர்கள். உடல் நிலை தேறும்.
கவனம் தேவை
செவ்வாய் சனி சேர்க்கை ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள சனியுடன் 6,11ம் அதிபதி செவ்வாய் பங்குனி 19 (2.4.2026) அன்று இணைகிறார். அடமான பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் நிலவிய மன அழுத்தம் குறையும். நவீன கரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். உயர் கல்வியால் மேன்மை உண்டாகும். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம். பிறவிக் கடன் மற்றும் பொருள் கடன் தீர்க்க உகந்த மாதமாகும். வீண் அலைச்சலும் காரியத்தடையும் வரலாம். உயில் எழுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப் போடவும். சொத்துக்களின் விற்பனை சாதகமாகும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும்.தாய், தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். அரசின் சட்ட திட்டங்களில் முறையாக கடைபிடிக்க வேண்டும் பணம் கொடுக்கல் வாங்கலுக்கு முறையான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். எதிலும் பொறுமையையும் நிதானத்தையும் கடைப்பிடிப்பது முக்கியமாகும்.
பரிகாரம்
மன சஞ்சலத்திலிருந்து விடுபட விநாயகரை தினமும் 21 முறை வலம் வர வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406