உயர்வான எண்ணம் கொண்ட மிதுன ராசியினரே
பிறக்கப் போகும் மாசி மாதத்தில் ராசி அதிபதி புதன் ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் கும்ப சஞ்சரிப்பார். மாசி14 (26.2.2026) அன்று கும்ப ராசியில் வக்கிரம் அடைவார். கோட் சார கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளதால் சுகமான வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கப் போகிறீர்கள். புகழின் உச்சிக்கு செல்லப் போகிறீர்கள். ஆன்ம பலம் கூடி புதுப் பொலிவு ஏற்படும். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். குடும்ப வாழ்க்கையில் நிலவிய பிரச்சினைகள் தடைகள் விலகும். எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும். வீண் அலைச்சல், துக்கம் விலகும்.
குடும்ப விசேஷங்களில் முதல் மரியாதை கவுரவப் பதவிகள் கிடைக்கும். காணாமல் போன பொருள்கள், முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். ஞாபக சக்தி கூடும். காதல் திருமண முயற்சி வெற்றி தரும். பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். சிலர் முன்னோர்கள் கடைபிடித்த கொள்கைகளிலிருந்து மாறுபட்டு செயல்பட நேரும். வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறும் காலம். புதிய சொத்து வாங்கும் போது முக்கிய ஆவணங்களை சரிபார்க்கவும். மாணவர்கள் விளையாட்டை தவிர்த்து எதிர்காலத்திற்கு திட்டமிட்டு படிப்பது அவசியம். எதிர்பாராத சில செலவுகள் வரலாம். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மூட்டு வலி, வயிறு சார்ந்த உபாதைகள் தீரும். பூர்வீக சொத்து தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளுடன் ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு நீண்ட காலமாக எதிர்பார்த்த தாய் வழி சீதனம் தேடி வரும்.
பொருளாதாரம்
பணவரவு அதிகரிக்கும். சுய சம்பாத்தியம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைத்த நிலை மாறும். பழைய பாக்கிகள் வசூலாகும். சுய ஜாதக ரீதியாக தன வரவில் நிலவிய தோஷங்கள் விலகும். பொன், பொருள் சேரும். பற்றாக்குறை வருமானத்தில் வாழ்ந்த குடும்பம் நிறைவான வருமானத்துடன் நடக்கும். தடைபட்ட வாடகை வருமானங்கள் வந்து சேரும். மனதிலிருந்த கவலைகள் மாறும். பல வருடங்களாக தீராத பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய சொத்துக்கள் சேரும். ஸ்திர சொத்துக்களின் மதிப்பு உயரும். சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும். சொத்து, தொழில் மற்றும் சுப செலவிற்காக வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முதலீட்டாளர்கள்
உற்பத்தி பெருகி, இலாபம் கூடும். நேரம் காலம் பார்க்காமல் அதிகம் உழைக்க நேரும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். வாழ்க்கையில் சுவாரஸ்யம் கூடும். எதிர்கால வளர்ச்சிக்கு புதிய மார்க்கம் தென்படும். கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். எதிர்க்கருத்து கூறியவர்கள் மனம் மாறுவர்கள். புதிய வழியில் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளி வட்டார தொடர்புகளால் புதிய தொழில் வாய்ப்பு கிடைக்கும். சிலர் நிலையான நிரந்தரமான தொழில், உத்தியோகத்திற்காக வீடு அல்லது ஊர் மாற்றலாம். புதிய தொழிலுக்கு எடுக்கும் முயற்சிகள் நல்ல மாற்றத்தை தரும். முதலாளி, தொழிலாளிகளிடம் கருத்து ஒற்றுமை மேலோங்கும். கமிஷன் தொழில், தரகு, பங்குச் சந்தை, ஜோதிடம் போன்ற தொழில் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
திட்டமிட்டு செயல்படுவீர்கள். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். செல்வாக்கு உயரும். உங்களின் ஆளுமைக்கு மதிப்பும், பாராட்டும் கிடைக்கும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வேலையின்மை மற்றும் தொழில் தோல்வியையும் சந்தித்து வந்த உங்கள் மனநிலை மாறும். பேச்சில் பொறுமை மட்டும் தான் உங்களுக்கு கை கொடுக்கும். சிலர் சுய தொழில் துவங்கலாம். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர உத்தரவு வரும்.
அரசியல்வாதிகள்
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு குறைவது போல் மனம் வேதனை அடையும். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைப்பீர்கள். வீண் அவமானம் மறைமுக எதிர்ப்பு ஏற்படும். நெருக்கமானவர்களே உங்களுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு இருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். பதவி மாற்றம், இலாகா மாற்றம் ஏற்படலாம். பொது மக்கள் ஆதரவை பெற வேண்டிய காலம். மேலிடத்தின் அதிகாரத்தால் மன அமைதி குறைவு உண்டாகலாம். உங்கள் பேச்சே உங்களுக்கு எதிரிகளை உருவாக்கலாம். எனவே எதையும் யோசித்து பேசுவது நல்லது. எதிர்பாலினத்திடம் கவனமாக இருக்கவும்.
பெண்கள்
சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெறும் மாதம். பெண்களுக்கு விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். கடன் தொல்லைகள் அகலும். உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும். தாயார் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வெளிநாடு சென்றவர்கள் சொந்த மண்ணிற்கு திரும்பும் சந்தர்ப்பம் உருவாகும். நீண்ட கால பரம்பரை நோய்க்கு மாற்று மருத்துவத்தின் மூலம் தீர்வு காண முயல்வீர்கள். உயில் எழுத ஏற்ற காலம். வேலைபளு மற்றும் அலைச்சல் சற்று அதிகமாக இருக்கும். தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்து செயல்படுவதால் மன ஒற்றுமை அதிகரிக்கும். வம்பு, வழக்கிலிருந்து முழுமையாக விடுபடுவார்கள். பிரிந்து வாழ்ந்த குடும்ப உறவுகள் இணைந்து வாழும் யோகமும் ஒற்றுமையும் உண்டாகும்.
கவனம் தேவை:
சூரிய கிரகணம்:
மாசி 5 (17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. மிதுன ராசிக்கு 9ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் ராகு சேர்க்கை ஏற்படுகிறது. இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். நன்மைகள் நடைபெறும். தொட்டது துலங்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.விலகிச் சென்ற உறவுகள் மீண்டும் இணைவார்கள். மூத்த சகோதரர், தந்தை பக்க பலமாக இருந்து உதவுவார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது. பங்குச்சந்தை, சூதாட்டம், புதிய முதலீடுகள் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக ஈடுபாடு அதிகமாகும். சுய ஜாதக ரீதியாக பித்ரு தோஷம் இருப்பவர்கள் கிரகணத்தன்று பித்ரு சாந்தி பூஜை செய்வதால் பாக்கிய பலம் அதிகரிக்கும். வெளி உணவுகளைத் தவிர்த்து வீட்டில் சமைத்த சூடான உணவை சாப்பிடவும்.
சந்திர கிரகணம்:
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். மிதுன ராசிக்கு மூன்றாம் இடமான வெற்றி ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்க உள்ளது. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் கேதுவுடன் இணைவதால் மனப்போராட்டம் அதிகரிக்கும் ஞாபக சக்தி குறையும்.வீடு மாற்றுவது, வேலை மாற்றுவது தொழில் நிறுவனத்தை மாற்றுவது, உத்தியோக மாற்றம், பத்திரப்பதிவு பாகப்பிரிவினை ஆகியவற்றை தவித்தல் நல்லது. முக்கிய பணப்பரிவர்த்தனைக்கு உள்ள ஆவணங்களை பத்திரமாக பராமரிக்க வேண்டும். சிலருக்கு விபரீத ராஜயோகமாக அதிர்ஷ்ட, பணம், பொருள், உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு உள்ளது. உயிர் காக்கும் முக்கிய அறுவை சிகிச்சை இருந்தால் செய்து கொள்ளலாம். முக்கிய ஆபரணம் மற்றும் ஆவணங்களை கவனமாக கையாள வேண்டும். யாருக்கும் ஜாமீன் போடக்கூடாது.அடமான நகைகள் சொத்துக்களை மீட்கும் முயற்சி வெற்றி தரும்.
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் தேவைகள் நிறைவேறும். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406