எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது முடிக்கும் மிதுன ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ரம் பெற்றும், நீச்சம் பெற்றும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு உச்சம் பெற்ற சுக்ரனும் இணைவதால் 'நீச்ச பங்க ராஜயோக'மும், 'புத சுக்ர யோக'மும் ஏற்படுகிறது.
எனவே பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தொழிலில் லாபம் ஏற்படும். சென்ற மாதத்தில் நடைபெறாத காரியங்கள், இப்போது தானாகவே நடைபெறும். உங்கள் ராசியிலேயே செவ்வாய் பலம்பெற்று விளங்குவதால், தைரியத்தோடு செயல்பட்டு சாதனை நிகழ்த்துவீர்கள்.
மீன - புதன் சஞ்சாரம்
மாதத் தொடக்கத்தில் மீன ராசியில் புதன் நீச்சம் பெற்றும், வக்ரம் பெற்றும் சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிநாதன் புதன் என்பதால், அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆதாயம் தரும் தகவல்களைக் காட்டிலும், விரயங்களை எடுத்துரைக்கும் தகவல்களே அதிகம் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்தில் மிகமிக கவனம் தேவை. கை வலி, கால் வலி, மூட்டு வலி என்று ஏதாவது ஒரு தொல்லை வந்து கொண்டேயிருக்கும். விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் வந்து சேரும். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நடைபெறாமல் போகலாம்.
கும்ப - புதன் சஞ்சாரம்
மீனத்தில் உள்ள புதன் பங்குனி 4-ந் தேதி, வக்ர இயக்கத்தில் கும்ப ராசிக்கு வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரம் நல்ல வாய்ப்புகள் பல இல்லம் தேடி வரப்போகிறது. தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். தாய்வழி ஆதரவும் அதிகரிக்கும். முட்டலும் மோதலுமாக இருந்த அண்ணன் - தம்பிகளின் உறவு, இப்பொழுது ஒற்றுமையாகும்.
அதோடு பாகப்பிரிவினைக்கும் ஏற்பாடு செய்வர். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நல்ல பொறுப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், அதிகாரம் மிகுந்த பதவிக்கு உயர்த்தப்படுவர்.
மீன - சுக்ரன் வக்ரம்
மீனத்தில் உள்ள சுக்ரன், இந்த மாதம் முழுவதும் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் வக்ரம் பெறும் இந்த நேரத்தில் நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். பிள்ளைகளால் பிரச்சினைகள் வரலாம். இடமாற்றம் இனிமை தரும் விதம் அமையாது. கல்யாண காரியங்கள் கைநழுவிச் செல்லலாம். பொருளாதாரத்தில் பற்றாக்குறை அதிகரிக்கும். வரவு ஒருமடங்கு வந்தால் செலவு இருமடங்காகும்.
கடக - செவ்வாய்
உங்கள் ராசிக்கு 6, 11-க்கு அதிபதியானவர் செவ்வாய். பங்குனி 24-ந் தேதி கடக ராசிக்குச் செல்லும் அவர், அங்கு நீச்சம் பெறுகிறார். எனவே கடன் சுமை குறையும். கவலைகள் தீரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். 'வெளிநாட்டில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று சிந்திப்பீர்கள். போட்டிக் கடை வைத்தவர்கள் விலகுவர். புதிய கிளைத் தொழில்கள் தொடங்கும் முயற்சி கைகூடும். இதுவரை வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி வெற்றிபெறும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பங்குதாரர்களால் பிரச்சினைகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விருதுகள் வாங்கும் சூழல் உண்டு. கலைஞர்களுக்கு விருதுகள் கூட கிடைக்கலாம். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் அக்கறை கூடும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வேலைக்காக எடுத்த முயற்சி கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 15, 16, 26, 27, 31, ஏப்ரல்: 1, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.