கடகம் - வார பலன்கள்

வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை

Published On 2025-07-06 09:05 IST   |   Update On 2025-07-06 09:06:00 IST

6.7.2025 முதல் 12.7.2025 வரை

வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசியில் முயற்சி ஸ்தான அதிபதி புதன் சஞ்சரிக்கிறார். திட்டமிட்ட காரியங்களில் படிப்படியான வெற்றிகளை அடைவீர்கள். தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி சீராகும். மாதச் சம்பள தாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும். வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள்.

தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். கடின உழைப்புக்கு வெகுமதி கிடைக்கும், பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சனி பகவான் வக்ரமடைய உள்ளதால் புதிய முதலீடுகளை ஒத்திப் போடவும்.

கல்லூரி உயர் படிப்பிற்கான முயற்சிகள் அனு கூலமாகும். பெண்களுக்கு உயர் ரக ஆடை ஆபரண சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நட்பால் ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். பவுர்ணமி அன்று அம்பிகையை வழிபடுங்கள்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News