கடகம் - வார பலன்கள்

இந்த வார ராசிப்பலன்

Published On 2023-07-31 16:05 IST   |   Update On 2023-07-31 16:06:00 IST

31.7.2023 முதல் 6.8.2023 வரை

விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். 10-ல் குரு ராகு சேர்க்கை இருப்பதால் சிலர் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் தொழில் அல்லது வேலைக்காக வெளிநாடு செல்லலாம். மதிப்புமிக்கவர்களின் நட்பும் அவர்களால் அனுகூலமும் உண்டாகும். தனம், வாக்கு குடும்ப ஸ்தானாதிபதி சூரியன் ராசியில் ராகு கேதுவின் மையப்புள்ளியில் சஞ்சரிப்பதால் காரியத் தடையும் மன சஞ்சலமும் மிகையாகும். எதையும் முறையாக திட்டமிட்டு செய்ய முடியாது.

நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாகவே இருக்கும். அஷ்டமச் சனி என்பதால் விரக்தி அதிகமாகும். இந்த காலகட்டத்தில் யாருக்கும் பணம் கடன் கொடுத்தாலோ அல்லது பண உதவி செய்தாலோ திரும்ப கிடைக்காது. புகழ், அந்தஸ்து, கவுரவம் போன்ற கவுகீக ஆசைக்கு மனம் ஏங்கும். இளவயதினருக்கு எதிர்பாலினரிடம் மிகுதியான ஈடுபாடு உண்டாகும். திருமண முயற்சியை தவிர்க்கவும். 2.8.2023 இரவு 11. 25 முதல் 4.8 .2023 இரவு 11. 17 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களிலும் முயற்சிகளிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆடிப்பெருக்கு அன்று புண்ணிய நதிகளில் நீராடவும்.

பிரசன்ன ஜோதிடர்

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Similar News