null
ஆளுமை தன்மை நிறைந்த மேஷ ராசியினரே
உங்களின் ராசி அதிபதி செவ்வாய் மாசி மாதம் 11ம் (23.2.2026) வரை மகர ராசியில் உச்ச நிலையில் இருப்பார். அதன் பிறகு கும்ப ராசிக்கு செல்வார்.
ராசி அதிபதி உச்சம் பெறுவதும் லாப ஸ்தானம் செல்வதும் சிறப்பான பலன்களையே ஏற்படுத்தித் தரும்.
கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட இன்னல்களில் இருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். உற்சாகமுடன் செயல்படுவீர்கள். எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெரும் தைரியம் உண்டாகும். சுகபோக வாழ்க்கை கிடைக்கும். உங்களின் தனித் திறமைகள் வெளிப்படும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம்.நல்ல உள்ளம் படைத்தவர்களின் நட்பால் புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
எண்ணங்கள் விருப்பங்கள் லட்சியங்கள் கனவுகள் நிறைவேறும். சிலருக்கு அதிர்ஷ்டமாக பொன் பொருள் சொத்துக்கள் சேரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு தேடி வரும். வேற்று மொழி பேசுபவர்களின் நட்பு, ஆதாயம் கிடைக்கும். தொழிலில் அகலக்கால் வைக்கக் கூடாது. பார்க்கும் வேலையை மாற்றக் கூடாது. எந்த செயலையும் திட்டமிட்டு செய்தால் பெரிய பாதிப்பு இல்லாமல் தப்பிக்க முடியும். ஏழரைச் சனியால் ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்ய முடியும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு திருமணத் தடை அகலும். வெகு சிலருக்கு மறுதிருமணம் நடக்கும்.புத்திர பிராப்தம் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும்.
சொத்துக்களை மீட்க தேவையான நிதி உதிவி கிடைக்கும். தவறுதலாக வாங்கிய வில்லங்க சொத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பாகப் பிரிவினை நடக்கும். பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.அரசு வேலைக்கு எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். ஆன்மீகச் சுற்றுலா, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகள் உள்ளது.
உங்களை உதாசீனம் செய்தவர்களுக்கு உங்கள் தயவு தேவைப்படும். நிம்மதி நீடிக்கும். செயற்கை கருத்தரிப்பு முறையை நாட உகந்த காலம்.வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.காணமால் போனவர்கள் வீடு திரும்புவார்கள். செய்யாத குற்றத்திற்கு சிறை தண்டனை அனுபவித்தவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறையும்.மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் கூடும். உயர்கல்வி வாய்ப்புகள் சித்திக்கும்.
பொருளாதாரம்
லாபகரமான மாதம். இந்த மாதத்தில் ராசிக்கு 11ம் இடமான லாபஸ்தானத்தில் உள்ள ராகுவுடன் சூரியன் சேருகிறார் இது லாபத்தையும், வெற்றியைும் அதிகரிக்கும் அமைப்பாகும்.புதிய சொத்துக்கள் சேரும். இது வரை விற்க முடியாமல் கிடந்த பழைய பூர்வீகச் சொத்துக்கள் விற்கும்.வீடு, வாகனம், நிலம், தோட்டம், பிள்ளைகளின் திருமணம் என சுப விரயங்கள் அதிகமாகும். வருமானம் இல்லாமல் கொடுக்கல் வாங்கல், வரவு செலவில் நாணயத்தை காப்பாற்ற முடியாமல் சங்கடத்தை அனுபவித்தவர்கள் சரளமான பொருள் வரவால் தொழில், வாழ்க்கை இரண்டிலும் திருப்தியான பலனை அடைய முடியும். நீங்கள் எந்த துறையில் பணி புரிகிறீர்களோ அந்த துறையில் சாதனை செய்து புகழ் அடைவீர்கள்.
முதலீட்டாளர்கள்
முன்னேற்ற பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். திட்டங்களும் கனவுகளும் வெற்றி பெறும்.விரயமும், துயரமுமான நிலை மாறும்.கொள்கை, கோட்பாடுடன் செயல்படுவீர்கள். தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும், லாபமும் உண்டாகும். தொழிலிலில் முன்னேற்றம் இருக்கும்.இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனை செய்து தொழிலை வளப்படுத்துவீர்கள்.
தொழில் போட்டியாளர்கள் விலகுவார்கள். தொழில் விருத்தி குடும்பத் தேவை மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு விண்ணப்பித்த கடன் உதவி கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்கள்
இடமாற்றமும் பதவி உயர்வும் நிச்சயம். அரசு வேலைக்கு முயற்சித்தவரின் கனவு நனவாகும். பொருளாதார நெருக்கடிகள் விலகும்
உத்தியோகத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். உத்தியோகத்தில் ஸ்திர தன்மை ஏற்படும். இதுவரை வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான நிம்மதியான வேலை கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்த மாகும். அரசு உத்தியோக வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். ஆனால் அதிகம் உழைத்து சிறிய பொருளை சம்பாதிக்க நேரும்.
அரசியல்வாதிகள்
பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகளுக்கு இது அற்புதமான நேரம். மக்கள் மனதில் இடம்பிடிக்க அயராது உழைத்து வெற்றியும் காண்மீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பதவி உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சமூக அந்தஸ்து உயரும் . நீங்கள் சார்ந்து இருக்கும் இயக்கத்தால் உங்களுக்கு மதிப்பு , மரியாதை உயரும். மிகுதியான சுபமும் குறைவான அசுபமும் நடக்கும். திடீர் லாபம் கிடைக்கும். ஆனால் சரியான நேரத்திற்கு வீட்டு உணவை உண்ண முடியாமல் காலம் தாழ்த்தி கிடைத்த உணவை உண்டு காலம் கடத்த நேரும்
பெண்கள்
லௌகீக உலகில் உள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கப் போகிறீர்கள். குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். கண், காது, மூக்கு, தொண்டை பிரச்சனைகள் அறுவை சிகிச்சையில் சீராகும்.புதிய சொத்து வாகனம் வாங்குவீர்கள். பொன், பொருள் சேரும். பிற மொழி இனத்தவர் உங்கள் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.
தந்தை, தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். அவரவர் வயதிற்கு ஏற்ப குழந்தை பாக்கியம், பேரன், பேத்தி யோகம் உண்டாகும். குடும்பம் கோவிலாக இருக்கும். உங்களின் பேச்சிற்கு மற்றவர் கட்டுப்படுவார்கள்.
பொருளாதார நிலை சாதகமாக உள்ளதால் அனைத்து விதமான ஏற்றத் தாழ்வுகளையும் சமாளித்து விடுவீர்கள்.நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும்.
கவனம் தேவை:
சூரியகிரகணம் :
மாசி 5 ( 17.2.2026)ல் நடக்கப் போகும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது. ஆனால் ராசிக்கு 11ம் இடமான லாப ஸ்தானத்தில் இந்த கிரகணம் நடைபெறுகிறது. அதுவே பாதகஸ்தானம் என்பதால் சிலர் கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். அல்லது தொழில், தொழில் உத்தியோகக்திற்காக பிறந்த ஊரை விட்டு பிரிந்து வெளியூர், வெளிநாடு போகலாம். பிறரை நம்பி குறுக்கு வழியில் செல்லக் கூடாது.
எதிர்பாலின நட்பை தவிர்க்கவும். தேவையற்ற வம்பு வழக்குகளை தவிர்க்கவும். எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டும். குடும்பத்தில் சங்கடங்களை தவிர்க்க பேச்சை கட்டுப்படுத்துவது நல்லது. உணவுக் கட்டுப்பாடு அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்.சிலருக்கு விபத்து கண்டம், சர்ஜரி அவமானம் போன்ற பாதிப்புகள் இருக்கும். கடன் பட்டு சொத்து சுகம் அமைத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். போட்டி தேர்வு, பந்தயங்களில வெற்றி நிச்சயம்.
சந்திர கிரகணம் :
மாசி 19ம் தேதி (3.3.2026) அன்று சந்திர கிரகணம் நடக்கப் போகிறது. இது பகுதி சந்திர கிரகணமாக இந்தியாவில் சில குறிப்பிட்ட பகுதிகளில் தெரியும். ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் சம்பவிக்கப் போகிறது.
ஆழ்மன எண்ணங்களை கட்டுப்படுத்தும் தியானம் யோகா மூச்சுப் பயிற்சி மனநிறைவு மன நிம்மதியை அதிகரிக்கும். அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வத்தை குறைக்க வேண்டும். குலதெய்வ வழிபாடு கோடி குற்றங்களை நிவர்த்தி செய்யும்.பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
குழந்தைகளை உங்களின் சொந்தப் பொறுப்பில் கண்காணிக்க வேண்டும்.காதல் விவகாரங்கள் அவமானத்தை ஏற்படுத்தலாம்.ஆன்மீக குருமார்களின் ஆசிர்வாதம் பெறுவது, நன்னடத்தையுடன் நடந்து கொள்வது, சிந்தித்து செயல்படுவது உங்களை உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்லும்.மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கிரகணம் முடிந்த பிறகு அருகில் உள்ள சிவன் கோவிலில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து கொள்வது நல்லது
பரிகாரம்
மாசி மாதம் சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவ வழிபாடு செய்வதால் குடும்ப வாழ்க்கையில் இருந்த இடையூறுகள் நீங்கும். உடல் நிலையில் இருந்த சங்கடம் விலகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406