ஆன்மிக களஞ்சியம்

வீரபத்திரர் விரதம்

Published On 2023-09-05 11:00 GMT   |   Update On 2023-09-05 11:00 GMT
  • இந்திரன் இவ்விரதமிருந்ததால் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான்
  • காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தல் வேண்டும்.

வீரபத்திரர் விரதம்

சித்திரை மாதம் முதல் செவ்வாய்க் கிழமையன்று வீரபத்திரர் விரதத்தைத் தொடங்க வேண்டும்.

கலசத்தில் வீரபத்திரர் திருவுருவினை அமைத்து அதற்கு அபிஷேகம், அர்ச்சனை, பூஜை முதலியன செய்து வழிபடுவதோடு அன்று முழுவதும் விரதம் இருந்து மறுநாள் கலசத்தில் நிறுவிய வீரபத்திரர் திருவுருவை பாரணை செய்தல் வேண்டும்.

இத்தகைய விரதத்தை நான்முகன் மேற்கொண்டதால் வீரபத்திரர் தக்கனுடன் போர் செய்த காலத்தில் வீரபத்திரருக்குத் தேர்ச்சாரதியாகும் பேறு பெற்றான் என்றும்,

இந்திரன் இவ்விரதமிருந்ததால் கற்பக நாட்டு அரசுரிமையைப் பெற்றான் என்றும், வேதியர்கள் பலர் இவ்விரதமிருந்து மெய்ஞ்ஞான நிலையை அடைந்தனர் என்றும் கூறுவர்.

இவ்விரதம் இருப்போர் முக்தி நிலையடையவர் என்று நம்புகின்றனர்.

இவ்விரதத்தின் போது சிவந்த நிறமுடைய மலர்களாலும் சந்தன உருண்டைகளாலும் வெண்ணெய், வெற்றிலை போன்ற பொருட்களாலும் வீரபத்திரரை பூஜிக்க வேண்டும்.

வில்வங்களை கொண்டு வீரபத்திரர் நாமங்களைத் துதிப்பது மிகவும் சிறப்பாகும்.

இவ்விரதத்தின் போது காரமான புளிசாதத்தை நைவேத்தியம் செய்து தானம் அளித்தல் வேண்டும்.

இதனால் பகை நீக்கம், புத்திரவிருத்தி, சகோதரபலம், நல்வழியில் நடப்பதற்கு ஏற்ற மன உறுதி ஆகியவை கிடைக்கும்.

திருப்பெருந்துறையில் வீற்றிருக்கும் வீரபத்திரரை வேண்டி இவ்விரதமிருந்தால் செவ்வாய் தோஷத்திற்கு பரிகாரம் கிடைக்கும்.

Tags:    

Similar News